ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... காபி ஏற்றுமதியில் சரிவுஐரோப்பாவில் தேவை குறைந்தது காபி ஏற்றுமதியில் சரிவுஐரோப்பாவில் தேவை குறைந்தது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2013
00:25

வர்த்தக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, 109.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,861.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் (14.20 கிலோ), வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் (19 கிலோ) என, இரண்டு வகை காஸ் சிலிண்டர்களை, வினியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாடு மற்றும் மானியம் அல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது.சென்னையில், கடந்த மாதம், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர், 1,752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை, 109.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,861.50 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.டில்லி, கோல்கட்டா மற்றும் மும்பை நகரங்களில், இதன் விலை முறையே, 1,643; 1,724; 1,738 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
ஓட்டல்களில் வீட்டு உபயோக சிலிண்டர்:தமிழகத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.54 கோடி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களும், 2 லட்சம் வர்த்தக சிலிண்டர் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.அண்மைக்காலமாக, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை, வீட்டு உபயோக சிலிண்டரை, அதன் சந்தை விலையுடன், கூடுதலாக, 100, 200 ரூபாய் கொடுத்து, முறைகேடாக பயன்படுத்தி வருகின்றன.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)