பதிவு செய்த நாள்
05 அக்2013
00:23

புதுடில்லி:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–2017), நாட்டின் அணுமின் உற்பத்தியை, 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.எல்.,) திட்டமிட்டுள்ளது.
தற்போது, உள்நாட்டில், 19 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக, 4,780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணு உலைகள்:இந்நிலையில், நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக, 16 அணு உலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.இதையடுத்து, நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த அணுமின் உற்பத்தி, 16 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும்.
வரும் 2022ம் ஆண்டில், அணுமின் திட்டங்கள் வாயிலாக, 20 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய, என்.பி.சி.ஐ.எல்., நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டில் அணு உலைகளின் செயல்பாட்டிற்கான யுரேனியம், ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். மாவட்டம்,
துமலப்பள்ளி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகிறது.
உள்நாட்டில், அணுமின் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இவற்றிற்கு போதிய அளவிற்கு யுரேனியம் கிடைக்காததால் , தற்போது, நம்நாடு, ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.
ஒப்பந்தம்:கடந்த 2009ம் ஆண்டில், இந்தியா, அமெரிக்காவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், 45 உறுப்பு நாடுகள், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய இசைவு அளித்துள்ளன.முன்பு இந்தியாவிற்கு, யுரேனியத்தை அளித்து வந்த, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேற்கண்ட ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்பு தெரிவித்தன.இந்நாடுகளும், தற்போது, இந்தியாவிற்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றன.
இறக்குமதி:இந்நிலையில், இந்திய அணு எரிசக்தி துறை, மத்திய ஆசிய நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறது.வரும் 2014ம் ஆண்டில, உஸ்பெஸ்கிஸ்தானிலிருந்து, 2,000 டன் யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ள, மத்திய அரசு, திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|