பதிவு செய்த நாள்
05 அக்2013
00:31

புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீடுகள் மூலம், திரட்டிய தொகை, இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டு, 1,700 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஜூலை மாதத்தில், 747 கோடி ரூபாயாக இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.
நடப்பு 2013–14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், 18 நிறுவனங்கள், பங்கு வெளியீடு மூலம் திரட்டிய தொகை, 3,967 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் முறையே, 13 நிறுவனங்கள் மற்றும் 1,140 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ரிலையன்ஸ்மீடியாஒர்க்ஸ், கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ், கோகுயோகேம்லின் மற்றும் ஆசகிஇந்தியா கிளாஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீடுகள்வாயிலாக, 1,659 கோடிரூபாயை திரட்டி கொண்டுள்ளன.
அதேசமயம், ஜி.சி.எம்.கமாடிட்டி அண்டு டெரிவேட்டிவ்ஸ், வி.கே.ஜே., இன்ப்ரா டெவலப்பர்ஸ், டைகர் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட, ஐந்து நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிதியை திரட்டி கொண்டு உள்ளன.சென்ற 2012–13ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீடுகள் மூலம், 32,455 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. இது, 2008–09ம் நிதியாண்டிற்கு பிறகு, நிறுவனங்கள் திரட்டிய (16,220 கோடி ரூபாய்) குறைந்தபட்ச அளவாகும் என, ‘செபி’ மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|