பதிவு செய்த நாள்
05 அக்2013
00:41

புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை–செப்.,), தனியார் பங்கு நிறுவனங்கள், 75 ஒப்பந்தங்கள் வாயிலாக, 130 கோடி டாலரை (7,800 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.
இது, கடந்தாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 67 சதவீதம் சரிவாகும் என, வென்சர் இண்டலிஜன்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில், 281 ஒப்பந்தங்கள் வாயிலாக, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீடு, 506 கோடி டாலரை (30,360 கோடி ரூபாய்) எட்டியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் இதே காலத்தில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், 373 ஒப்பந்தங்கள் மூலம், 815 கோடி டாலரை ((48,900 கோடி ரூபாய்) முதலீடு செய்துஇருந்தன. ஆக, மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனங்களின் முதலீடு, 38 சதவீதம் சரிவை கண்டுள்ளது. நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், அதிக அளவில் தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்ததில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகளின் பங்களிப்பு, 45 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
அதாவது, மேற்கண்ட துறைகளில் மட்டும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், 25 ஒப்பந்தங்கள் மூலம், 58.20 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.தயாரிப்பு (18.50 கோடி டாலர்/9 ஒப்பந்தங்கள்), மருந்து மற்றும் வாழ்க்கை அறிவியல் (14 கோடி டாலர்/14 ஒப்பந்தங்கள்) ஆகிய துறைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு, தனியார் பங்கு முதலீட்டை வெகுவாக கவர்ந்துள்ளதாக, வென்சர் இண்டலிஜன்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|