பதிவு செய்த நாள்
05 அக்2013
12:01

மழைக்காலங்களில் கார் பயணம் என்பது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். காரணம், சாலைகளில் வழுக்கும் தன்மை அதிகரித்திருக்கும்; சாலைகளில் அதிக மேடு பள்ளங்கள், நீர் நிறைந்த சாலை என்றவாறு ஓட்டுபவர்கள் அதிக கவனத்துடன் ஒழுங்குடன் ஓட்ட வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் ஏற்படும் விபத்துகள் தான் அதிகமாக உள்ளன.
அதிகமான மழைக்காலங்களில், சாலை மிக மோசம் அடைவதால் வாகனம் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லாத போதும், விபத்துகள் மழைக்காலத்தில் இரட்டிப்பாகிறது.
எனவே, இந்த பிரச்னைகளை சமாளிக்க வேண்டுமானால் கார் ஓட்டும் போது மெதுவாகவும், சாலையின் தன்மைக்கு ஏற்பவும் ஓட்ட வேண்டும். அதனுடன் கார்களில் மேற்கொள்ளும் தினசரி பராமரிப்புகளையும், மழைக்காலத்திற்கு ஏற்ற சில அரசிய பராமரிப்புகளையும் மேற்கொள்ளும்போது, தேவையற்ற பிரச்னை மற்றும் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.
மழைக்காலங்களில் செய்ய வேண்டிய அவசிய கவனிப்புகளில், இரவில் நிறுத்திவிட்டு காலையில் எடுக்கும் போது, தான் அதிகமாக கவனிக்க வேண்டும். ஏதேனும் ஒழுகுதல், டயர் அழுத்தம், காற்று அழுத்தம் போன்றவை கவனித்தல் வேண்டும். அதோடு கூல்லண்ட் அளவு, பிரேக் ஆயில் அளவு, தண்ணீர் அளவு மற்றும் விண் ஷீல்ட் கழுவும் திரவ அளவு போன்றவை கவனிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
வைப்பர் பிளேடு எந்த நிலையில் உள்ளது என்பதை, விண் ஷீல்டில் வைப்பரை இயக்கி பார்க்க வேண்டும். அதன் மூலம் வைப்பரின் உண்மை நிலை அறிய முடியும். வைப்பரில் ஏதேனும் உடைப்பு, பிளவு இருந்தால் புதிய வைப்பர் மாற்றுவது சிறப்பானது.
* ஹெட்லைட் களின் ஒளிரும் தன்மையை சோதித்து பாருங்கள்.
* ரிவில்ஸ் லைட் மறறும் ரிவர்ஸ் கியர் போன்றவை, சரியாக உள்ளதா என்பதை பரிசோதியுங்கள்.
* அதிக மேகமூட்டம் மற்றும் பனி படர்ந்த நேரங்களில், பார்கிங் லைட்சை பகல் நேரத்தில் உபயோகித்து கொள்ளலாம்.
* சர்ஜ் டேங்கில் உள்ள கூல்லண்ட் அளவை சோதித்து பாருங்கள் (அதாவது பிளாஸ்டிக் சேமிப்பு பகுதி).
* பெரும்பாலும் மழைநேரங்களில் அதிவேகம் கூடாது.
* டேயில் விளக்குகளை சுத்தம் செய்து சோதித்து பாருங்கள்.
* பிரேக் பிடிக்கும் திறனில், ஏதேனும் கோளாறு உள்ளதா என்பதை சோதித்து, பாதிப்பு இருந்தால் உடனே சரிபார்த்து விடுங்கள்.
* அதிக நீர் நிறைந்த சாலைகளில், நடுவில் மட்டுமே வாகனத்தை செலுத்துங்கள்.
* முதலுதவி பெட்டி, கைபிடியுள்ள தண்ணீர் பாட்டில் (விண் ஷீல்டு சுத்தம் செய்வதற்கு பயன்படும்) போன்றவைகளில் இருப்பது அவசியம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|