பதிவு செய்த நாள்
05 அக்2013
12:21

புளூடூத் என்பது,பலவிதமான மின்னணுசாதனங்களை, ஒன்றுடன் ஒன்று கம்பிகள் இல்லாமல், தொடர்பு கொள்ள உதவும், புதிய தொழில் நுட்பம் ஆகும். இது மிகக் குறைந்த சக்தி கொண்ட ரேடியோ சிக்னலை கொண்ட இது, 30 அடி தூரத்திற்குள் இயங்கக் கூடியது, இத்தொழில்நுட்பம். பல்வேறு சாதனங்களான போன், கேமரா, பிடிஏ போன்ற கைகளால், உபயோகிக்கக்கூடியவற்றை, உபயோகிப்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான, வசதியான தொழில்நுட்பமாகும்.
புளூடூத் கொண்டவயர்லெஸ் ஹெட்செட் மற்றும் ஹேண்ட்ஸ்-ப்ரீகார் சிஸ்டம் மூலமாக, ஓட்டுனர் சாலையிலிருந்து தங்கள் கவனம் சிறிதும் கலையாமல் பாட்டு கேட்பது, பிறருடன் பேசுவது போன்றவைகளை செய்யலாம்.இன்று, இத்தொழில்நுட்பத்தில், பல்வேறு விதமான புதிய அம்சங்கள் வந்துவிட்டன. ஸ்பீச் - ரெகக்னீஷன்,டெக்ஸ்ட் - டூ -ஸ்பீச் டெக்னாலஜி மற்றும் "ஸ்பீச் ட்ரிக்கர்' வசதிகளை, குரல் மூலம் கட்டுப்படுத்தும் அம்சங்கள் என்று, பல மேம்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன.
காருடன் ஸ்மார்ட் போன் மொபைலில் இருக்கும் போன்புக் விவரங்களை, காரின் நேவிகேஷன் டிஸ்ப்ளே மூலம், பார்க்க முடிவதுடன், அதிலிருந்து நாம் கூப்பிட வேண்டியவருடன், கைகளை உபயோகிக்காமல், பேச முடிவதும் இந்த புளூடூத் தொழில் நுட்பத்தின் பலன்கள் எனலாம்.
அதேபோல் போனிலிருந்து, நமக்கு தேவையான பாடல்களை காரின் ஸ்பீக்கர்கள் மூலம் கேபிளோ, அடாப்ரோ, ப்ளக்குகளோ இல்லாமல் கேட்கலாம். ஜிபிஎஸ் நேவிகேஷன் ஜிபிஎஸ் கன்சோலில் இருக்கும், டிஸ்ப்ளே மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான வரைபடத்தை காட்டக்கூடியதாகும். ஆனால், இந்த தொழில் நுட்பத்துடன் புளூடூத் சேரும்போது, நம்முடன் ஒரு காரியதரிசியை உடன் வைத்திருப்பது போன்று இருக்கும். நமக்கு வேண்டியதை, டைப் செய்து கேட்காமல் நேரிடையாக பேசலாம்.
எப்படி செல்வது என்ற வழி தடத்தை மட்டும் காட்டாமல், நம் கட்டளைக்கு ஏற்ப, அடுத்து வரக்கூடிய போக்குவரத்து சின்னங்கள், எதிர்படும் சாலைகளும், சந்திப்புகளும், நாம் செல்ல வேண்டிய இடம் சாலையின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது. அருகாமையில் இருக்கக்கூடிய தங்கும் விடுதி போன்ற மற்ற சேவைகள் என்று, அனைத்து தகவல்களையும் தந்துவிடும். இதைத் தவிர சீதோஷ்ணம், பொழுதுபோக்கு, எரிபொருட்களின் விலை, பங்குச் சந்தை நிலவரங்கள் போன்றவைகளையும் கைகளை இயக்காமல், சாலையிலிருந்து கவனம் சிதறாமல் தெரிந்து கொள்ளலாம்.
சில கார்களில் புளூடூத் ஹேண்ட்ஸ் -ப்ரீ கிட்கள் மிகவும் நவீன வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.இவ்வசதியில்லாத கார்களில், நாமே வெளிச்சந்தையிலிருந்து, இந்த "கிட்' களை வாங்கி பொருத்திக்கொள்ளலாம். பேரட், மோட்டோ ரோலா போன்ற நிறுவனங்கள், நியாயமான விலைகளில் புளூடூத் கிட்களை விற்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|