பதிவு செய்த நாள்
05 அக்2013
17:20

ப்யூவல் செல் கார்களில் இன்றைய எரிபொருளுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்டால் சக்தி சேமிப்பும், சிக்கனமான எரிபொருள் பயன்பாடும், முழுமையான மாசுக்கட்டுப்பாடும் கிடைக்கும். ப்யூவல் செல் என்றால் என்ன அது எப்படி இயங்குகிறது. என்று பார்ப்போம். ப்யூவல் செல் என்பது ரசாயனத்தை மின்சக்தியாக மாற்றும் உபகரணம் ஆகும். நமக்கு தெரிந்த உபயோகத்தில் உள்ள ரசாயன மின்சக்தி மாற்ற உபகரணம் பாட்டரியாகும். இந்த பாட்டரி இதனுள் இருக்கும் ரசாயனத்தை மின்சக்தியாக மாற்றும் முழுவதுமாக மாற்றியப் பிறகு அது உபயோக மற்றதாகிவிடும். ஆனால் ப்யூவல் செல்லில் இந்த ரசாயனம் தொடர்ந்து வந்துக்கொண்டேயிருக்கும். அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சரி இந்த ப்யூவல் செல் உபயோகிக்கும் ரசாயனம் என்ன என்றால் அது ஹைட்ரஜன் மட்டும் ஆக்சிஜன் ஆகும். இந்த செல் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை தண்ணீராக மாற்றும்போது உருவாக்கப்படுவதே இதிலிருந்து பெறப்படும் மின்சாரமாகும்.
பாலிமர் எக்ஸ்சேன்ஜ் மெம்ப்ரேன் ப்யூவல் செல் (PEMFC) என்பதே இன்றைய முக்கியமான ப்யூவல் செல் தொழில் நுட்பமாகும். இந்த செல் தான் கார்கள், பஸ்கள் மற்றும் வீடுகளுக்கும் கூட மின்சாரம் வழங்கக் கூடியதாகும். ப்யூவல் செல்கள் மாசுக்கட்டுப்பாட்டை முழுமையாக அளிப்பதுடன் சிறந்த செயல்திறனையும் வழங்கு கிறது. ஹைட்ரஜனைக் கொண்ட ப்யூவல் செல்கள் 80 சதவீத சக்தியை கொடுக்கிறது. அதாவது, அது ஹைட்ரஜன் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை சக்தியாக மாற்றுகிறது. அதாவது 80 சதவிகித மின்சக்தி மெக்கானிக்கல் சக்தியாக மாற்றப்படுகிறது.
ப்யூவல் செல்லில் உள்ள ஹைட்ரஜன் சுத்தமான வாயுவாக இருக்க வேண்டும். ஹைட்ரஜன் அபரிமிதமாக காற்று வெளியில் இருந்தாலும் அது தனியாக கிடைப்பதில்லை. ஹைட்ரஜன் கூட்டுப் பொருட்களில் இருந்து ஹைட்ரஜன் பிரித்து எடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பவர் பேருந்தை இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்ஏ) திருநெல்வேலி மாவட்டம் மஹேந்திர கிரியில் சோதனை ஓட்டமாக நிகழ்த்தியது. ஹைட்ரஜன் வாயுவை 150 பார் அட்மோஸ்பியர் என்றளவிற்கு அழுத்தப்பட்டு சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு பேருந்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாயுவை 2 பார் அட்மோஸ்பியர் அளவு அழுத்தம் நீக்கப்பட்டபின் இன்ஜினை அடைந்து அங்கு ப்யூவல் செல் டிசி மின்சாரமாக மாற்றுகிறது. இந்த மின்சக்தி மீண்டும் "ஏசி' மின்சாரமாக மாற்றப்பட்டு இன்ஜினை இயக்க உதவுகிறது. ஹைட்ரஜன் திரவநிலையில் இதில் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், இதில் தண்ணீர் மட்டுமே சக்தி மாற்றத்திற்கு பிறகு வெளியேற்றப்படுவதால் காற்றில் மாசு ஏற்படுவது முழுவதுமாக தவிர்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|