பதிவு செய்த நாள்
05 அக்2013
17:33

கார் அனைவரின் விருப்பமான ஒன்றாகி விட்டது. புதிய கார்அல்லது பழைய கார் என்றவாறு, தினம் தினம் பல்வேறு நபர்கள், கார் வாங்கி கொண்டு தான் இருக்கின்றனர்.பழைய கார் வாங்கும்போது, இது வாங்கி ஒரு ஆண்டு தான் ஆகிறது என்று கூறுவர். ஆனால், நமக்கு கார் வாங்கி, ஒரு ஆண்டு தான் ஆகிறதா என்பதை, உறுதி செய்து கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு, விடை இதோ. காரின் தயாரிப்பு ஆண்டு, மாதம் முதலியவைகளை அறிய, பயன்படுவது தான், VIN அதாவது, வெகிக்கிள் ஐடென் டிவிகிஷன் நம்பர் என்பதின் சுருக்கம். அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களிலும், இந்த VIN பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், காரின் ஆயுட்காலத்தை தெளிவாகவும், உண்மையாகவும் அறிய முடியும். சில சமயம் நாம் வாங்கும் புதிய கார்களின் தயாரிப்பு, ஆண்டு மற்றும் மாதத்தை அறிய, முற்படும்போது, VIN நமக்கு உதவி புரிகிறது.
காரில் VIN எங்கு பதியப்பட்டிருக்கும்?
காரின் இன்ஜின் பகுதி அல்லது பயணிகள் அமருமிடம் ஏதேனும் ஒன்றிலும், காரின் டிரைவர் பகுதி கதவு திறந்தால், கார் பிரேம் பகுதியில், காரின் முன்பக்க கண்ணாடியின் கீழ்பகுதி போன்றவைகளில், ஸ்டிக்கர் அல்லது அழிக்க முடியாதபடி, எழுத்துகளால் பதியபட்டிருக்கும். இது ஒவ்வொரு நிறுவன கார்களில் வித்தியாசப்படும்.
17 முதல் 20 வரையிலான பார்கோட் நம்பர்கள்:
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் நிறுவனங்கள், தங்களுக்குள் வித்தியாசப்படுத்தப்பட்ட வி.ஐ.என். எழுத்துக்களை, 17 முதல், 20 வரையிலான எண்ணிக்கையில் பொறித்து உள்ளன. உதாரணமாக டாடா நிறுவனத்தின் VIN அதாவது, இதிலுள்ள, 10வது எழுத்து, கார் தயாரிப்புஆண்டையும், 12வது எழுத்து கார் தயாரிப்பு மாதத்தையும். குறிக்கின்றன. அதுபோல மாதத்திற்கு என, ஒரு குறியீடு எழுத்துக்களும், ஆண்டிற்கு என, குறியீடு எழுத்துகளும் முறையே எழுதப்படும்.
உதாரணமாக, பத்தாவது எழுத்து, "அ' என்று இருந்தால், ஆண்டு - 2010. பன்னிரண்டாவது எழுத்து "எ' என்று இருந்தால் மாதம் - ஜூலை என்றவாறு ஒரு நெறியாக நிறுவனங்கள் வடிவமைக்கின்றன.
கார் தயாரிப்பு நிறுவனத்தின் மாத குறியீடுகள்
A = ஜனவரி
B = பிப்ரவரி
C = மார்ச்
D = ஏப்ரல்
E = மே
F = ஜூன்
G = ஜூலை
H = ஆகஸ்ட்
J = செப்டம்பர்
K = அக்டோபர்
L = நவம்பர்
M = டிசம்பர்
கார் தயாரிப்பு நிறுவனத்தின் வருட குறியீடுகள்
A = 2010
B = 2011
C = 2012
D = 2013
E = 2014
F = 2015
G = 2016
H = 2017
J = 2018
K = 2019
இவற்றில், ‘I’,‘O’ மற்றும் ‘Q’எழுத்துக்கள் VIN பகுதியில் எப்போதும் பயன்படுத்தப்படாது. இந்த மாதம் மற்றும் ஆண்டு குறீயிடுகளுக்கு எழுத்துக்கள் பெரும்பாலும் பொதுவாகவே உள்ளன.
அவற்றை பொறிக்கும் இடங்கள் தான், நிறுவனங்களிடையே மாறுபடுகின்றன. அதாவது மேற்கூறிய டாடா நிறுவனத்தை போன்றே இல்லாமல், ஷேர்வோலேட் நிறுவன கார்களில், 17 இலக்க போர் கோட் எண்ணில், ஒன்பதாவது இலக்க எண் மாதத்தையும், 10வது இலக்க எண் ஆண்டையும் குறிக்கின்றன.
அதுபோல் பெரும்பான்மையான கார் தயாரிப்பு நிறுவனங்கள், 17 இலக்க எண்ணை பயன்படுத்துகின்றன. ஹூண்டாய், 19 இலக்கமும், பியட், 20 இலக்கமும், டொயோட்டா, 22 இலக்கமும், மாருதி, 21 இலக்கமும் VIN குறியீடு எழுத்துகளை பயன்படுத்துகின்றன.
மேலும், முதல் மூன்று இலக்கங்கள, கார் நிறுவனவதின் பெயரை குறிப்பிடும் வகையில் உள்ளன என்பது சிறப்பு. கார் வாங்கும்போது, பழசோ, புதுசோ கார் தயாரிப்பு ஆண்டு மற்றும் மாதத்தினை அறிந்து வாங்கும்போது, நமக்கு அதிக உற்சாகத்துடன் பயணம் சிறப்பாக அமையும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|