பதிவு செய்த நாள்
06 அக்2013
12:49

தனியார் நிறுவனங்களுடன், போட்டி போடும் வகையில், புதிய டிசைன்களை உருவாக்குவதற்காக, ஸ்டுடியோ ஒன்றை துவங்க, கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு, ரூ.15 லட்சத்தை, தமிழக அரசு வழங்கியுள்ளது. "கோ ஆப்டெக்ஸ்' நிறுவனம் சார்பில், நேற்று டில்லியில், 15 நாட்கள் நடைபெறும் கண்காட்சி, தமிழ்நாடு இல்லத்தில் துவங்கியது.
கண்காட்சியை துவக்கி வைத்த, கோஆப்டெக்ஸ் உயர் அதிகாரி சகாயம், நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் நிறுனங்களுடன் போட்டி போடும் வகையில், புதிய டிசைன்களை உருவாக்க வேண்டியது, அவசியம். இதை கருத்திற் கொண்டு, கோ ஆப்டெக்ஸ் சார்பில், புதிய வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்றை துவங்க, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டுடியோவை அமைக்க, தமிழக அரசு, ரூ.15 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது. இந்த ஸ்டுடியோவில், பேஷன் டெக்னாலஜி நிபுணர்கள் ஆறு பேர், புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். இதுமட்டுமல்லாது, சித்தன்ன வாசல் ஓவியங்களை மாதிரியாக வைத்து, புதிய டிசைன்களும் உருவாக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு, கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், 244 கோடி ரூபாய், வர்த்தகம் செய்துள்ளது. இந்த ஆண்டில், ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்வதற்கு, உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சகாயம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|