பதிவு செய்த நாள்
06 அக்2013
12:52

விருதுநகர்: வறட்சியால், வரத்து குறைந்து, விருதுநகர் மார்க்கெட்டில், 15 ரூபாய்க்கு விற்ற தேங்காய் ரூ.25க்கு விற்பனையாகிறது . ""பண்டிகை காலம் வருவதால், விலை மேலும் உயரும்,'' என வியாபாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் மார்க்கெட்டிற்கு, கன்னியாகுமரி,பொள்ளாச்சியில் இருந்து, தினமும் பல லாரிகளில், தேங்காய் லோடு வரும். பருவமழை பொய்த்து, வறட்சி நிலவுவதால், விளைச்சல் குறைந்து, தேங்காய் வரத்து சரிந்துள்ளது. இதனால், கடந்த 10 நாட்களுக்கு முன், 15க்கு விற்ற தேங்காய், தற்போது 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், தேங்காய் விலை மேலும் உயரும், எனத் தெரிகிறது.
விருதுநகர் வியாபாரி சண்முகம்,"" முன்பு எண்ணிக்கை கணக்கில், தேங்காய் வாங்கினோம். அளவில் சிறியது, பெரியது என பிரச்னை வந்ததால், இப்போது கிலோ கணக்கில், தேங்காய் வாங்குகிறோம். 1 கிலோ 13 ரூபாய்க்கு வாங்கிய நிலையில், வரத்து குறைவால், தற்போது 1 கிலோ 22 ரூபாய் வரை விற்கிறது. லாரி வாடகை, தொழிலாளர் செலவு என கணக்கிட்டு பார்த்தால், 25 ரூபாய் வரை விலை உயர்வு வரும்.
வீட்டுத்தேவைக்கு, வாரத்திற்கு 3 தேங்காய்களை வாங்குவோர், விலையைக்கேட்டு விட்டு, 2 மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். இன்னும், சிலமாதங்களுக்கு இந்த விலை உயர்வு இருக்கும். விலையை குறைத்தால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும்,'' என்றார்.
விருதுநகர் சுபாஷினி,""அத்தியாவசியப் பொருட்களுடன் தேங்காய் விலையும் உயர்ந்து விட்டது, கவலையளிக்கிறது. இன்னும் சிலமாதங்களுக்கு, இதே நிலை தான் நீடிக்கும் என்கிறார்கள். இப்படியே போனால், தேங்காய் சார்ந்த உணவு சமைப்பதை குறைத்துக்கொள்ள வேண்டியது தான்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|