பதிவு செய்த நாள்
06 அக்2013
14:11

மும்பை: ரயில்வே அமைச்சகம் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டண முறை அடிப்படையில் ரெயில் கட்டணத்தை 2 சதவீதம் நாளை முதல் உயர்த்துகிறது. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயருகிறது.இது இன்று நள்ளிரவு முதல் அமலாக்கப்படுகிறது.
ஆனால் இரண்டாம் வகுப்பு மின்சார ரயில்களுக்கான கட்டணம் மற்றும் முன்பதிவு செய்யப்படாத கட்டணத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. முதல் வகுப்பு ஒருமுறை பயணிக்கும் டிக்கெட்டில் ரூ.5 மற்றும் மாதாந்திர சீசன் கட்டணத்தில் ரூ.20 வரையிலும் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு கட்டண முறையால் அக்டோபர் 7 முதல் ரயில்வேதுறைக்கு கூடுதலாக ரூ.450 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது கட்டண உயர்வு: இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி மின்சார ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது ஒரே ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள 2வது கட்டண உயர்வு ஆகும். முதல் வகுப்பு கட்டண உயர்விற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|