தங்கம் விலை ரூ.128 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.128 உயர்ந்தது ... விதி­மு­றையை தளர்த்­தினால் இந்­தி­யாவின்சர்­வ­தேச விமான சேவை அதிகரிக்கும் விதி­மு­றையை தளர்த்­தினால் இந்­தி­யாவின்சர்­வ­தேச விமான சேவை ... ...
இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
19:40

சோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்டுள்ளது. தற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். சிம் இயக்கத்தினைத் தவிர மற்ற அனைத்தும் ஒரே மாதிரியான அம்சங்களையே இந்த இரண்டு போன்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றின் திரை 4 அங்குல அகலம் கொண்டு, 800 x 480 பிக்ஸெல்கள் கொண்ட காட்சித் தோற்றத்தினைத் தருகிறது. இந்த திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திறன் கொண்டது. இவற்றில், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் எம்.எஸ்.எம். 8227 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றை இயக்குகிறது.

பின்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த, வீடியோ பதியும் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமராவும், முன்புறமாக, வீடியோ அழைப்புகளுக்கென, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. இவற்றின் தடிமன் 9.3 மிமீ. எடை 115 கிராம். எப்.எம். ரேடியோ கீஈகு தொழில் நுட்பத்துடன் இயங்குகிறது. 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, DLNA, A2DP இணைந்த புளுடூத் 4, 1ஜிபி ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1750 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)