பதிவு செய்த நாள்
08 அக்2013
04:10
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்களன்று சரிவைக் கண்டது.கடந்த வாரம் வெள்ளியன்று, ரூபாய் மதிப்பு, 61.45 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 35 காசுகள் சரிவடைந்து, 61.80ல் நிலைகொண்டது.நேற்று அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 6 காசுகள் சரிவடைந்து காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 61.49 வரையிலும், குறைந்தபட்சமாக, 61.95 வரையிலும் சென்றது.அமெரிக்க நிதி மசோதா தொடர்பான பிரச்னையில், இழுபறி நீடிப்பதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு குறைந்துள்ளது.இதனால், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.இதன் தாக்கத்தால், அன்னியச் செலாவணி சந்தையும் நேற்று சுணக்கமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|