பதிவு செய்த நாள்
09 அக்2013
00:43

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் நிதிபுழக்கத்தை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால், ‘சென்செக்ஸ்’ 0.44 சதவீத உயர்வுடனும், ‘நிப்டி’ 0.38 சதவீத உயர்வுடனும் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 88.51 புள்ளிகள் அதிகரித்து, 19,983.61 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,150.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,936.72 புள்ளிகள் வரையிலும் சென்றது. ‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், பார்தி ஏர்டெல், எல் அண்டு டி உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ஸ்டெர்லைட் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 22.25 புள்ளிகள் உயர்ந்து, 5,928.40 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,981.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,913 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|