பதிவு செய்த நாள்
09 அக்2013
00:45

புதுடில்லி:இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, நடப்பு 2013ம் ஆண்டின், முதல் ஒன்பது மாதங்களில் (ஜன.,–செப்.,), 44 சதவீதம் குறைந்து, 1,700 கோடி டாரலாக (1.02 லட்சம் கோடி ரூபாய்) சரிவு அடைந்துள்ளது என, மெர்ஜர் மார்க்கெட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது, கடந்த 2012ம் ஆண்டின் இதே காலத்தில், 3,030 கோடி டாலராக (1.82 லட்சம் கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
மூன்றாவது காலாண்டு:குறிப்பாக, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, 28.6 சதவீதம் சரிவடைந்து, 570 கோடி டாலரகவும், இரண்டாவது காலாண்டில், 800 கோடி டாலராகவும் குறைந்துள்ளது.நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், உள்நாட்டிற்குள் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, 66.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு,710 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, மூன்றாவது காலாண்டில், 240 கோடி டாலராக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
வெளிநாடுகள்:நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தலின் மதிப்பு, 47.2 சதவீதம் சரிவடைந்து, 530 கோடி டாலரிலிருந்து, 280 கோடி டாலராக குறைந்துள்ளது என, மெர்ஜர் மார்க்கெட் நிறுவனம் அதன் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|