பதிவு செய்த நாள்
09 அக்2013
10:12

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(அக்., 9ம் தேதி, புதன்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 135.16 புள்ளிகள் சரிந்து 19,848.45-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 50.20 புள்ளிகள் சரிந்து 5,878.20-ஆகவும் இருந்தது.
ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியமைப்பு நடப்பாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5.7 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைத்ததன் எதிரொலியாக வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பங்குகளின் விலை சரிந்தன. இதனால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.44 சதம் ஏற்றத்துடனும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.62 சதவீதம் சரிந்தும் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|