பதிவு செய்த நாள்
09 அக்2013
12:56

மும்பை : நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்துக்கான நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது 17.15 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த மார்ச் 2011ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் வர்த்தக பற்றாக்குறை இந்தளவு சரிந்துள்ளது. 2011 மார்ச்சில் இது 3.8 பில்லியன் டாலராக இருந்தது.
ஏற்றுமதியை பொறுத்தமட்டில் 11.15 சதவீதம் உயர்ந்து 27.68 பில்லியன் டாலராக இருக்கிறது. இறக்குமதி 18.1 சதவீதம் சரிந்து 34.44 பில்லியன் டாலராக உள்ளது. தங்கம்-வெள்ளி இறக்குமதியும் 4.6 பில்லியனில் இருந்து 0.8 பில்லியனாக சரிந்துள்ளது.
தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவு சரிந்ததால் தான் வர்த்தக பற்றாக்குறை இந்தளவுக்கு குறைந்ததாக மத்திய வர்த்தகதுறை செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இரும்பு தாதுக்கான ஏற்றுமதி வரியை குறைக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|