பதிவு செய்த நாள்
09 அக்2013
14:55

புதுடில்லி : சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பல கிளைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் பிரிய முடிவெடுத்துள்ளன. மேலும் இருவரும் தனித்தனியாக செயல்படவும் முடிவெடுத்துள்ளனர். வால்மார்ட்-பார்தி நிறுவனங்கள் இருவருக்கும் 50-50 சதவீதம் பங்குகள் இருந்தது. தற்போது இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதால் பார்தியின் 50 சதவீத பங்குகளையும் வால்மார்ட் நிறுவனமே வாங்க முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.
இதுகுறித்து பார்தி நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் பார்தி கூறுகையில், வால்மார்ட்டை விட்டு பிரிந்தாலும் சில்லரை வணிகத்தில் பார்தி நிறுவனம் தொடர்ந்து செயல்படும். உலக தரத்தில் சுமார் 2012 ஸ்டோர்கள் துவங்க முடிவு செய்துள்ளோம். நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது நிறுவனத்தின் சேவை இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|