பதிவு செய்த நாள்
09 அக்2013
16:51

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. செப்டம்பர் மாதத்துக்கான ஏற்றமதி 11.15 சதவீதம் உயர்ந்தது, இறக்குமதி 18.1 சதவீதம் சரிந்தது மற்றும் 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியன் டாலராக குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், சரிவில் இருந்த இந்திய பங்குசந்தகள் மதியத்திற்கு மேல் நல்ல ஏற்றம் கண்டன. இதனால் 3வாரத்திற்கு பிறகு சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 6 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டியது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 265.65 புள்ளிகள் உயர்ந்து 20,249.26-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 79.05 புள்ளிகள் உயர்ந்து 6,0013.70-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி வங்கி, இன்போசிஸ், சன் பார்மா போன்ற நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|