பதிவு செய்த நாள்
10 அக்2013
01:29

புதுடில்லி:பன்முக பிராண்டுகளின் மொத்த விற்பனையில், கூட்டாக செயல்பட்டு வந்த அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனமும், உள்நாட்டை சேர்ந்த பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனமும், பிரிய முடிவு செய்துள்ளன.
பங்கு மூலதனம்:இதையடுத்து, பார்தி வால்மார்ட் நிறுவனத்தில், பார்தி என்டர்பிரைசஸ் கொண்டுள்ள, 50 சதவீத பங்கு மூலதனத்தையும், வால்மார்ட் வாங்கி, தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது.
வால்மார்ட் நிறுவனம், கடந்த 2007ம் ஆண்டு, பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, பார்தி வால்மார்ட் என்ற நிறுவனத்தை துவக்கியது.தலா, 50 சதவீத பங்கு மூலதனத்துடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 'பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல் சேல்' என்ற பிராண்டு பெயரில், பெங்களூரு, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில், 20 மொத்த விற்பனை கடைகளுடன் இயங்கி வருகிறது.
வால்மார்ட் நிறுவனம், பன்முக பிராண்டுகளின் சில்லரை விற்பனையில் ஈடுபட வேண்டு மென்றால், 49 சதவீத பங்குமூலதனத்துடன் வரும் உள்நாட்டு நிறுவன மொன்றுடன் கூட்டு கொள்ள வேண்டும்.அல்லது தற்போது உள்ளபடி, மொத்த விற்பனையில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
நடப்பு, 2013ம் ஆண்டு, வால்மார்ட், 8 மொத்த விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டிருந்தது.ஆனால், சில்லரை விற்பனையில், அன்னிய முதலீடு குறித்த அரசின் தெளிவற்ற கொள்கை, லஞ்ச விவகாரத்தில், முக்கிய அதிகாரிகளின் பணி நீக்கம், கூட்டு நிறுவனமான பார்தி என்டர்பிரைசஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்றவற்றால், விரிவாக்கத் திட்டத்தை தள்ளி வைத்தது.
முக்கிய முடிவு:பொதுத் தேர்தலுக்கு இன்னும், 7 மாதங்களே உள்ளதால், வால்மார்ட், புதிய அரசு அமையும் வரை, முக்கிய முடிவு எதுவும் எடுக்காமல் காத்திருக்கும் என, தெரிகிறது.
அதே சமயம், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம், அதன், 212'ஈசி டே செயின்' பிராண்டு சில்லரைவிற்பனை கடைகளை தொடர்ந்து நடத்தி வர முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|