பதிவு செய்த நாள்
10 அக்2013
01:36

புதுடில்லி:நடப்பு 201314ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 10.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி:இது, சென்ற நிதிஆண்டின் இதே காலத்தில்,2.72 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.நேரடி வரி வசூலின் கீழ், தனிநபர் வருமான வரி, நிறுவனங்கள் செலுத்தும் வரி, செல்வ வரி, பங்கு பரிவர்த்தனை வரி உள்ளிட்டவை அடங்கும்.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய மொத்த வரி வசூல், 7.93 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,78,173 கோடி ரூபாயிலிருந்து, 1,92,308 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டு உள்ளது.
இதே போன்று, தனிநபர் வருமான வரி வசூல், ஒட்டு மொத்த அளவில், 16.15 சதவீதம் அதிகரித்து, 91,463 கோடியிலிருந்து, 1,06,231 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், செல்வ வரி வசூலும், 5.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 474 கோடியிலிருந்து, 499 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்கு பரிவர்த்தனை வரி, 2,210 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
கணக்கீட்டு காலத்தில், நிகர அளவிலான நேரடி வரி வசூல், 10.72 சதவீதம் அதிகரித்து, 2,26,653 கோடியிலிருந்து, 2,50,953 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இலக்குநடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, நேரடி வரி வசூல் வாயிலாக, 6.68 லட்சம் கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இது, கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட தொகையை (5.65 லட்சம் கோடி ரூபாய்) விட, 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|