பதிவு செய்த நாள்
10 அக்2013
12:42

புதுடில்லி: ஓட்டல்களில் நீச்சல் குளம் மற்றும் திறந்த வெளி பகுதியில் சப்ளை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கும் சேவை வரி பொருந்தும்' என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.நிதி பற்றாக்குறையை சமாளிக்க, நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வரி வருவாயை அதிகரிப்பதில் கவனமாக உள்ளது. சேவை வரி மூலமான வருவாயை பெருக்கும் வகையில், பல்வேறு சேவைகள் இந்த வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது குறித்து, கலால் மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியம் கூறியதாவது: ஓட்டல்களில் குறிப்பிட்ட ரெஸ்டாரென்டுகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு, சேவை வரி பொருந்தும். ஓட்டல்களோடு இணைந்து நீச்சல்குளம் மற்றும் திறந்த வெளி பகுதிகளில் சப்ளை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு சேவை வரி விதிக்கப்படும். அதே சமயம், ரெஸ்டாரென்டுகளில் அதிகபட்ச சில்லறை விலையில் விற்கப்படும் பொருட்கள் மறறும் தண்ணீர் பாட்டில்களுக்கு சேவை வரி பொருந்தாது. குளிர்சாதன வசதி செய்யப்படாத ரெஸ்டாரென்டுகளில் வழங்கப்படும் சேவைக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாரியம் கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|