பதிவு செய்த நாள்
10 அக்2013
12:48

புதுடில்லி: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 22,744 கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், ஒட்டு மொத்த அளவில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 1.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், வங்கி துறையின் பங்களிப்பு, 15.7 சதவீதமாகும். பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில், மேற்கொண்ட முதலீடு கடந்த, 2012ம் ஆண்டு ஆகஸ்டில் தான், 22,586 கோடி ரூபாய் என்ற அளவில், மிகவும் குறைந்து காணப்பட்டது. எனினும், இது, கடந்தாண்டு டிசம்பரில், 43,659 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 22,744 கோடி ரூபாய் என்ற அளவில் மிகவும் சரிவடைந்துள்ளது. வங்கி துறையை அடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 20,284 கோடி ரூபாயாகவும், மருந்து துறை நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 12,444 கோடி ரூபாயாகவும் உள்ளது. மேலும், நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர துறை நிறுவனப் பங்குகளில், 10,771 கோடி ரூபாயையும், பெட்ரோலிய துறை நிறுவனப் பங்குகளில், 8,958 கோடி ரூபாயையும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|