சிறிது உயர்ந்தது தங்கம் விலைசிறிது உயர்ந்தது தங்கம் விலை ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பாங்கான தோற்றம்... பாதுகாப்பான பயணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2013
18:20

ப்ரென்ச் வாகன உற்பத்தியாளரான, ரெனோ மஹிந்திராவிடனான கூட்டிலிருந்து பிரிந்த பின், கொண்டு வந்த மூன்றாவது மாடல் ரெனோ பல்ஸ். செடான் ப்ளூயன்ஸ் மற்றும் எஸ்.யு.வி., கோலியோசை தொடர்ந்து, பெரும்பான்மையான இந்திய மக்களை கவரும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் பல்ஸ். 2011 ஆம் ஆண்டு பார்முலா ரேசில் திறந்து வைக்கப்பட்டு, 2012ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனோ பல்ஸ் முதலில் டீசல் வேர்பன்ட்லும் பின், பெட்ரோல் வேரிபன்ட்லும் கொண்டு வரப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் தேவைக்கேற்ப வடிவம், அம்சங்கள் மற்றும் நிறங்களை தேர்வு செய்து, இந்திய வடிவமைப்பாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது தான், பல்ஸ்.

தோற்றம்: மிகவும் ஸ்போர்டியான அதே நேரம் முரட்டுத்தனம் கலந்த வடிவம் கொண்டது பல்ஸ். முன்புறம் உள்ள க்ரில் இரட்டை
க்ரில் கொண்டு நடுவில் கம்பீரமான ரெனோ லோகோவுடன் கவனத்தை, கவர்கிறது. மேற்கூரையும் ஆடம்பரமாய் தெரியும் முன்புற பம்பரும், ஸ்போர்டியாய் தோற்றமளிக்கும் ஹெட்லாம்பும் கம்பீரமான தோற்றத்தை பல்சிற்கு அளிக்கிறது.

உட்புறம்: ரெனோ பல்சின் உட்புறம் வசதியாகவும், தாராள இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டோர் லாக் அன்லாக், டில்ட் அட்ஜஸ்ட்பிள் ஸ்யரிங், ஆன்போர்ட் ட்ரிப் கம்ப்யூட்டர் போன்றவை பல்ஸ் பயணத்தை சுகமாக்கும் அம்சங்கள். ட்யூவல் டோன் ராஷ்போர்ட் பின்புற இருக்கைகள் மடக்கும் படி உள்ளது; க்ரீன் டின்டட் க்ளாஸ், லாக் / அஸ்லாக் சென்சி, ஆட்டோமேட்க் ஓஆர்விஎம், சென்ட்ரல் லாக்கிவ் போன்றவை, பொதுவாக இந்த செக்மன்ட் கார்களில் இல்லாத அம்சங்களாகும்.

செயல்திறன்: ரெனோ பல்ஸ், 1.5 லிட்டர் k9k டீசல் என்ஜின் 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டு இயங்குகிறது. சீறும் செயல்திறன், குறைவான கார்பன்-டை- ஆக்சைட் வெளயீடு மற்றும் குறைந்த பராமரிப்பு கொண்டதாக, இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டு உள்ளது. லிட்டருக்கு, 23.08 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுப்பதாக, ஏஆர்ஏ சான்றிதழ் பெற்றுள்ளது பல்ஸ். நிசான் மைக்ராவின் ப்ளாட்பார்மை கொண்டுள்ளது போல், அதன் இன்ஜினையும் ரெனோ பல்ஸ் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின், 1.2லி DOHC இன்ஜினாகும். 1198 சிசி திறனுடன் 75 bhp பவரையும், 104 டார்க்கையும் வழங்குகிறது. இதன் மூன்று சிலிண்டர்கள் இன்லைன் வடிவத்தில் இருப்பதும், 1.2 வால்வுகள் கொண்டு எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்டுள்ளதும், சிறந்த சக்தியை வழங்க உதவுகிறது.

பாதுகாப்பு:
முன்புற ஓட்டுனர் மற்றும் பயணிகள் இருக்கைக்கு இரண்டு ஏர்பேக்கள் இதில் உள்ளன. முன் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு, ஹெட்ரெஸ்ட் கழுத்தை பாதுகாக்கும் வகையில் மாற்றிக் கொள்ள கூடியதாய் உள்ளது. ஸ்மார்ட் ஆக்சஸ் கீ பாக்கெட்ல் இருக்கும்போது, காரின் அருகே நாம் இருக்கும் தூரத்தை கணித்து தானாகவே கதவு திறந்து மூடிக் கொள்கிறது. மேலும் பட்டனை தட் காரை ஸ்டார்ட் செய்யும் வசதியும் இதில் உண்டு. பின்புற வின்ட்ஷீல்டில் கொடுக்கப்பட்டுள்ள, வைப்பர் பின்புற பார்வையை தெளிவாக்குகிறது.
ரெனோ பல்ஸ் இந்தியர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஒரு ஹேட்ச் பேக மாடல் தோற்றம் செயல்திறன், எரிபொருள் திறன், விலை, வசதி என்று எல்லாவற்றிலும் நிறைவான வாகனமாக திகழ்கிறது பல்ஸ்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)