சிறிது உயர்ந்தது தங்கம் விலைசிறிது உயர்ந்தது தங்கம் விலை ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமஹா ஒய் இசட் எப்-ஆர்15 ஓன் மேக் ரேஸ் சாம்பியன் ஷிப் சீசன் 2013ன் நான்காவது சுற்று
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2013
18:34

யமஹா நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சியாக நடத்தப்பட்டு வரும் பந்தய போட்டிதான், யமஹா ஆர் 15 ஒன் மேக் ரேஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள். பந்தய கலாசாரத்தையும், பாதுகாப்பான வாகனம் ஓட்டும் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இப்பந்தயம் புதிய உயரத்தை தொட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.சென்னை மோட்டார் பந்தய ரசிகர்களை, உற்சாகப்படுத்துவதற்கு என, சென்னை மோட்டார் ரேஸ் ராக்கில் யமஹா ஒய் இசட் எப்ஆர் 15 ஒன்மேக் ரேஸ் சாம்பியன்ஷிப், 2013ன் நான்காவது சுற்று வெற்றிகரமாக நடந்து முந்தன. இது இந்திய தேசிய ரேசிங் சாம்பியன் ஷிப் 2013 போட்டியின் அங்கமாக திகழும், இப்போட்டியை மெட்ராஸ்மோட்டார் ஸ்போர்ஸ் கிளப் மற்றும் இந்திய மோட்டார் ஸ்யோர்ஸ் கிளப் மற்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ஸ் அங்கங்களின், கூட்டமைப்பு இணைந்து நடத்தின.
பந்தய பாதையில் சீறி பாய்ந்த யமஹாவின், ஒய் இசட் எப்ஆர்15: சென்னை மோட்டார் ரேஸ் ராக்கில், பந்தய போட்டியாளர்கள் யமஹாவின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் ஒய்இசட் எப்ஆர்15 சீறிபாய்ந்து, தங்கள் வேகத்தை காட்னார்கள். யமஹாவின் பந்தய மரபணுவுடன் கூடிய ஒய்இசட் எப்ஆர்15 முழுமையான ரேசிங் அனுபவத்தை, பைக் ரசிகர்களுக்கு அளித்து அதன் ஆற்றல், நிலைதன்மை, கார்னரிங் மற்றும் பிரேக்கிங் குறித்து நேரடியான மயிர்செரியும் அனுபவத்தை அளித்தது.

யமஹா, மோட்டோ ஜிபி மற்றும் உலக சூப்பர் பைக் ரேசிங்கில் கிடைத்த அனுபவத்தை வைத்து, இந்த பைக்கில் டேடோனா பொருத்தியுள்ளது. இது அவர்களின் அனுபவத்தை, கூடுதலாக அதிகரித்துள்ளது. ஒய் இசட் எப் ஆர்15ல் உள்ள ஆர் தொழில்நுட்பம், டெல்டாபாக்ஸ் பிரேம் பியுயில் இன்ஜெர்ஷன் 6 வேக கியர்பாக்ஸ், ஸ்டைலிங், லிக்வுட் கூல்ட் 4வி இன்ஜின் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை அதிக ஆற்றல் கொண்டிருந்தால், யமஹா ஒய் இசட் எஆர்15 கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. ஆர்15 லூன்மேன் ரேஸ் சாம்பியன் ஷிப்2013ல் வெற்றி பெற்றவர்கள் ஆசியன் கோப்பை 2013ல் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். சென்னையில் நடைபெற்ற நான்காவது சுற்று, இரு பிரிவுகளாக நடைபெற்றன. நோவைஸ் பிரிவு, ஓபன் பிரிவு என்றதில் நோவைஸ் பிரிவு சென்னையை சேர்ந்த முரளிதரன் முதலிடம் பித்து வெற்றி பெற்றார். புனேயை சேர்ந்த ஆகாஷ் திங்காரே முதல் ரன்னாகவும், ராஞ்சியை சேர்ந்த அமித் ரிச்சர்ட் டோட்ணோ இரண்டாவது ரன்னாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.யமஹாவின் சீரிய முயற்சியால் நடைபெற்ற யமஹா ஒய்இசட்எப்ஆர்15 ஒன்மேன் மேக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியதுடன், சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)