பதிவு செய்த நாள்
16 அக்2013
01:44
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் சரிவை சந்தித்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 61.55 ஆக இருந்தது. இது, நேற்று மேலும், 30 காசுகள் சரிவடைந்து, 61.85ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 20 காசுகள் அதிகரித்து, 61.35 ஆக காணப்பட்டது. இது ஒரு கட்டத்தில், அதிகபட்சமாக, 61.31 வரை சென்றது. எனினும், மாலையில், டாலருக்கான தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணத் துவங்கியது.
கடந்த ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 10.30 சதவீதம் குறைந்துள்ளது. ஆசிய அளவில், டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பு சரிவடைந்துள்ளதில், ஜப்பானின் யென், இந்தோனேஷியாவின் ருப்யாவை அடுத்து, இந்திய ரூபாய் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|