இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கிஇந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி ... ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பார்க்க செல்ல குட்டி... செயலிலோ ரொம்ப சுட்டி!!! மினி கூப்பர் செம சூப்பர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
17:04

கடந்த 1959ம் ஆண்டு முதல்,பிரிட்டிஷ் மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வந்த, சர்வதேச அளவில் வெற்றிப் பெற்ற மாடல் தான், மினி என்ற குட்டிக் கார்கள். ஆஸ்டின்மினி, மாரிஸ் மினி மைனர் என்றபெயர்களில் வெளிவந்த மினிப்ராண்ட் வேறு, பல நிறுவனங்களால் (லேலண்ட் ரோவர்) உரிமையாக்கப்பட்டு, இரண்டாயிரம்ஆண்டு பி.எம்.டபிள்யூ., வினால் வாங்கப்பட்டது. இரண்டாயிரம் முதல் பி.எம்.டபிள்யூ, இக்கார்களை உலகெங்கும் விற்பனை செய்கிறது குறிப்பிடத்தக்கது. சிறிய அளவில் அதிக செயல்திறனுடன் "கோ-கார்ட்'காராக இக்கார் பயன்படுத்தப்பட்டது. 1959 முதல் இன்று வரை, உலக கார் ரசிகர்களின் மனதில், நீங்காத இடம் பிடித்துவந்த மினி கூப்பர் இந்தியாவிலும் விற்பனைக்கு உள்ளது. பிரிமீயம் கார்கள் வைத்திருப்பவர்கள், தங்களின் பட்டியலில் பெரும்பாலும் இக்கார் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மினி கூப்பரின்நான்கு வேரியன்ட்களும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுபவை. இவை நான்கும் சி.பி.யு.,என்ற கம்ப்ளீட் பாடி யூனிட் கொண்டவை.

மினி கூப்பர் கன்வர்டியின் மற்றும் ஹேட்ச் கூபேயில், 1.6 லிட்டர்திறனுடன் 122 பி.எச்.பி., பவர்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மினி கூப்பர் ஹேட்ச் கூபேஎஸ் மற்றும் கன்ட்ரிமேன் வேரியன்ட்களில், 1.6 லிட்டர் 1598 சி.சி.திறன் கொண்ட 184 பி.எச்.பி., பவர் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மினி கூப்பர் ஹேட்சி, மினி கூப்பர் எஸ் மற்றும் மினி கூப்பர் கன்வர்ட்டியின் ஆகிய மூன்றும் கூபேமாடல்கள் என்பதால், இரண்டு கதவுகள் கொண்டு பார்க்க மிகவும் அடக்கமாகவும், அழகாகவும் இருக்கின்றன. இதில் கன்வர்ட்டியின்மாடலில், மேற்கூரை இல்லாமல்பயணம் செய்வது மிகவும் ரம்மியமாகவும், அதே நேரம் சாகசம்நிறைந்ததாகவும் இருக்கும். கன்ட்ரிமேன் மாடல் நான்கு கதவுகள்கொண்டதாகவும் சற்றே அதிக இடம்வசதி உள்ளதால், ஐந்து பேர்தாராளமாய் அமர்ந்து செல்லும்படி உள்ளது.
கார் பயணத்தை ரசித்து அனுபவிப்பவர்கள் நெரிசலற்ற நெடுஞ்சாலை மற்றும் மலைப் பகுதிகள்மட்டுமின்றி, நெரிசலான நகரச்சாலைகளிலும், தங்கள் திறமையான ஓட்டும் திறனால், பிரமாதமாய் ஓட்டி மகிழ்வர். இந்தக் கார் அப்படிப்பட்டவர்களின் ஆசையை நிறைவேற்றி, ஓட்டும் அனுபவத்தை சுலபமாகவும், நிறைவாகவும் செய்கிறது. சிறிய கார் அதிகசெயல்திறன் என்பதால், சடாரென்று சீறிப் பாய்வதும் பாய்ந்த சுவடே தெரியாமல் பதுங்கி, நல்லபிள்ளையாய் போக்குவரத்து நெரிசலில் சேர்ந்து கொள்வதும், பின்இடம் கிடைத்ததும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராவதும், இதனை ஓட்டுபவர் மட்டுமின்றி, உடன் பயணிக்கும் சக ஓட்டுனர்களும் இதன் சாகசத்தை ரசிக்கின்றனர். சீறிப் பாய்ந்துசென்றாலும், யாருக்கும் ஆபத்தில்லாத வகையில், பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. ஆறு ஏர்பேக்கள், ஏ.வி.எஸ்., ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் கார்னரில் ப்ரேக் கன்ட்ரோல் போன்றவை பாதுகாப்பானபயணத்தை உறுதி செய்கின்றன.

இதில் உள்ள பேடல் ஷிப்ட் இயர் ஸ்டியரிங் பிடித்தபடியே சுலபமாய் உபயோகிக்க முடிகிறது. சர் சர்என்று பாய்ந்து செல்ல தேவையானஉடனடி உந்துதலை இவை தருகின்றன. இதன், 6 ஸ்பீட் ஆட்டோமெடிக் ட்ரான்மிஷனின் ஸ்ட்ரெக்ட்ரானிக் தொழில்நுட்பம் கியர்மாறுவது விளையாட்டாகவும், கவனிக்க முடியாத வகையில் மென்மையாகவும் இருக்கிறது.
இந்த காரின் கதவுகள், 90 டிகிரிகோணத்தில் திறப்பது வசதியானதாக உள்ளது. இதன் உட்புற இருக்கை அமைப்பு, நான்கு பேர் அமர்ந்து கொள்ள வசதியாய்உள்ளது. கூபே என்பதால், கன்ட்ரிமேன் தவிர, மற்ற, 3 வேரியன்ட்களில் பின்புறம் உயரமானவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து செல்லசற்றே கடினமாய் தோன்றலாம்.இதன் மல்டி காரின் வேகம் மற்றும்திரும்பும் திசை ஏற்ப தானாய் மாறிக்கொள்வதுடன், பங்ஷன் ஸ்டியரிங்வீல் ஓட்டுனரின் விரல் நுனியின் கட்டுப்பாட்டில், பல வேலைகளைகொண்டு வந்து விடுகிறது. க்ரூபிஸ்கன்ட்ரோல் உள்ளதும், இபேடல்ஷிப்ட் கியர் உள்ளதும் ஓட்டும் அனுபவத்தை சுலபமாக்கி சுகமாக்குகிறது.
இதன் பை-ஜெனான்க ஆப்ஷனல் அடாப்டீவ் ஹெட்லைட், ஆட்டோமெடிக் ஹெட்லைட் பீட் த்ரோகண்ட்ரோல் கொண்டுள்ளதால்,சென்சார்கள் மூலம் ஓடும் பாதைமற்றும் காரின் வேகம், திசைக்குஏற்ப தானாய் மாறிக் கொள்கிறது.

இதிலுள்ள ஸ்பெஷல் ஹைபை ஸ்பீக்கர்கள் ஹார்மோன் கார்டன்என்பதும், இதனுடன் சேர்ந்த டிஜிட்டல் மல்டி - சேனல் ஆம்ப்ளி பையர்பிரமாதமாக, இசை பிரியர்களின் ரசனைக்கு தீனி போடுகிறது. இதன்ரேடியோ மினி விஷ்வல் பூஸ்ட்மிகத் துல்லியமான, 6.5 அங்குலடிஸ்ப்ளே கொண்டுள்ளதுடன்,மினி ஜாய் ஸ்டிக் மூலம் ஆன் -போர்ட் கம்யூட்டரை சுலபமாய்இயக்க முடிகிறது. ஸ்போர்ட் பட்டன் உள்ளதில்,வாகனத்தின் த்ராட்டல் ரெஸ்பான்சை இயல்பாக்கி, நேரடியாய்இயக்க வைப்பதுடன் கியர் ஷிப்ட்நேரத்தை குறைத்து, ரேசில் ஓட்டுவது போன்றும், அதே நேரம் சுலபமாகவும் ஓட்டுவதற்கு துணை புரிகிறது.
க்ளாஸ் ரூப் வித்தியாசமான அனுபவத்தையும், அளிப்பதும் சுகமானதாகும். இளைஞர்களை கவரக் கூடியபல நவீன அம்சங்களும், புதிதாய்ஓட்டுபவர்கள் கூட ரேஸ் கார் ஓட்டுபவரை போல, ஓட்டக்கூடிய சுலபமான தொழில்நுட்பமும், வேகத்துடன் விவேகமும் சேர்ந்து இயங்கும்பாதுகாப்பும் சாகசம், விளையாட்டுகேளிக்கை விரும்புவோரின் தேர்வாக இக்கார்கள் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது. ரோல்ஸ் - ராய்ஸ் கார் வைத்திருக்கும், நம்ம ஊர் பிரபலங்களின்மனம் கவர்ந்து அதிகம் பேர் உபயோகிக்கும் செல்லகுட்டியாக இக்கார் இருக்கின்றது என்பதே, இதன்கவர்ச்சியையும், தோழமையையும்,செயல்திறனையும் பறைசாற்றக்கூடியதாகும். தற்போது மினி கூப்பரில் டீசல் வேரியன்ட்டும் கிடைக்கிறதென்பது கூடுதல் மகிழ்ச்சியாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)