பதிவு செய்த நாள்
18 அக்2013
03:01

புதுடில்லி : மத்திய, மாநில அரசுகளின் முகமை அமைப்புகளிடம் உள்ள உணவு தானியங்களின் கையிருப்பு, நடப்பு அக்டோபர் மாத துவக்கத்தில், 5.51 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இது, சென்ற மாதம், 5.90 கோடி டன்னாகவும், கடந்த ஆண்டு, இதே காலத்தில், 6 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள், நடப்பு 2013-14ம் நிதிஆண்டிற்கு, இம்மாத துவக்கத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளன.
தற்போது, இந்த அமைப்புகளின் கையிருப்பில், 1.90 கோடி டன் அரிசியும், 3.61 கோடி டன் கோதுமையும் உள்ளன. இது, உபரி கையிருப்பை சேர்த்து நிர்ணயிக்கப் பட்டுள்ள, 2.12 கோடி டன்னை விட, இரு மடங்கிற்கும் அதிகம்.உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, 6-6.10 கோடி டன்உணவு தானியம் தேவைப்படும். கரீப் பருவ நெல் மற்றும் ரபி பருவ கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, சாதனை அளவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை கொள்முதல் செய்ய, போதுமான அளவிற்கு கிடங்கு வசதி இல்லாத நிலை உள்ளது.
முகமை அமைப்புகளிடம், 6.10 கோடி டன் உணவு தானியங்களை சேமிக்கும் அளவிற்குத் தான் கிடங்கு வசதி உள்ளது. இதில், 1.80 கோடி டன் உணவு தானியங்களை வைப்பதற்கான வெற்றிடமும் அடங்கும். இயற்கை இடர்பாடு காரணமாக, இங்கு நீண்ட காலத்திற்கு உணவு தானியங்களை இருப்பில் வைத்திருக்க முடியாது.
இதனால், மத்திய அரசு, 85 லட்சம் டன் என்ற அளவிலான உபரி கோதுமையை, வெளிச் சந்தையில் விற்க, அரசு முகமை அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி யுள்ளது. இத்துடன், மேலும், 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனால், முகமை அமைப்புகளின் கிடங்குகளில் இருந்து, உணவு தானியங்களை வெளியே அனுப்பும் பணி முடுக்கி விடப்பட்டுள் ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|