பதிவு செய்த நாள்
18 அக்2013
10:40

தேனி : இன்னும் 15 நாட்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் நெல் அறுவடை துவங்குவதால், அரிசி விலை இப்போதே குறைந்து வருகிறது. "புது நெல் வரத்து துவங்கியதும், விலை மேலும் குறையும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 15 நாட்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நெல் அறுவடை தொடங்கி விடும். இந்த ஆண்டு நல்ல நீர் வளம் இருந்ததால், விளைச்சல் நன்றாக உள்ளது. அடுத்த சாகுபடியும் உடனே தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அறுவடையான நெல்லில் பெரும்பகுதி, விற்பனைக்கு வந்து விடும். கர்நாடகா ஸ்டீம் ரைஸ் காவேரி சோனா 100 கிலோ மூடை 3300 ரூபாயில் இருந்து 3200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் எல்லா ரகத்திலும் ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. புது நெல் வந்ததும், புதிய ரக அரிசி விலை அதிகமாக குறையும். ஆனால் பழைய அரிசி விலை சீராக இருக்கும், என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|