பதிவு செய்த நாள்
18 அக்2013
22:03

டொயேட்டோ இந்தியா புதிய வடிவிலான இனோவாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கம்பீரமான தோற்றமும், மாற்றியமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களும், இந்தியாவின் நம்பர் ஒன்எம்.பி.வி., என்று கூறும் அளவிற்கு உள்ளன. புதியபிரிமியம் கிரேடு - இசட் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, இனோவா மிக உறுதியான புதிய வடிவிலும், அழகான பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலானக்ரோம் பினிஷ் போன்றவையோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெருகேற்றப்பட்ட உட்புறம் அழகாக, அதன் உட்பினிஷ் இயர் நாட் மற்றும் வுட் பேனல் டேஷ்போர்டு போன்றவை, கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இதன் இ.யு.ஆர்.ஓ., 3, இ.யு.ஆர்.ஓ., 4 என்ற இருவகையிலும், ஏழு மற்றும் எட்டு சீட் வசதிகள் கொண்டவாறு கிடைக்கின்றன. ஏ.பி.எஸ்., மற்றும் டூயல்எஸ்.ஆர்.எஸ்., ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய இனோவாவின் துவக்க விலை என்பது சென்னையில்,12,66,152 ரூபாய்.இந்தியாவில் ஏற்கனவே, 4,30,000 இனோவா கார்கள் விற்பனையாகி உள்ள வேளையில், புதிய வரவாக வந்துள்ள, முற்றிலும் புதிய இனோவா, வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|