பதிவு செய்த நாள்
19 அக்2013
01:26

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரங்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், அதிகளவில் இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், ‘சென்செக்ஸ்’ 2.29 சதவீதம் மற்றும் ‘நிப்டி’ 2.37 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.
மூன்றாவது காலாண்டில், சீனா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப்பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதுவும், இந்திய பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, உலோகம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 467.38 புள்ளிகள் அதிகரித்து, 20,882.89 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,932.23 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,486.78 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 143.50 புள்ளிகள் உயர்ந்து, 6,189.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,201.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,070.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|