பதிவு செய்த நாள்
19 அக்2013
01:38

நடப்பாண்டு, பருவ மழை நன்கு உள்ளபோதிலும், உணவு தானிய விதைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால், நடப்பு ரபி பருவத்தில் உணவு தானியங்களின் விளைச்சல் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோதுமை:நடப்பு நிதியாண்டில், இந்தியா, கோதுமை உற்பத்தியில்சாதனை படைக்கும் என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், அண்மையில் தெரிவித்திருந்தார்.ஆனால், அவரது அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் கூட்டுறவு துறைக்கான வேளாண் ஆணையரான ஜே.எஸ்.சந்து, நடப்பு ரபி பருவத்தில், தரமான விதைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என, தெரிவித்துள்ளார்.குறிப்பாக, கோதுமை உற்பத்திக்கான தரமான விதை கிடைப்பது, தொடர்ந்து பற்றாக்குறையாகவே இருக்கும் என, அவர் மதிப்பிட்டுள்ளார்.குளிர் கால பயிர்களின் விதைப்பு பணிகளுக்கு, தேவையான அளவை விட, குறை வாகவே விதைகள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரபி பருவம்:இதனால், ரபி பருவத்தில், குறிப்பிட்ட பயிர்களின் உற்பத்தி, மதிப்பீட்டை விட, குறையும் என, தெரிகிறது.நாடு முழுவதும் மழைப்பொழிவு சிறப்பாக உள்ளதால், விளைநிலங்கள் ஈரப்பதமுடன், நடவுக்கு ஏற்றதாக உள்ளன. இதனால், பல்வேறு உணவு தானியங்களின் பயிரிடும் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.அவ்வாறு அதிகரித்தால், விதைகளுக்கான தேவையும் அதிகரிக்கும். விதைகளுக்கான பற்றாக்குறையை உடனடியாக சமாளிக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், விதைகளுக்கான பற்றாக்குறை மேலும் உயரும்.
சிறப்பான மரபணுக்களை கொண்ட, தரமான விதைகளை, நியாயமான விலையில் விவசாயி களுக்கு வழங்க வேண்டும. இதனால், உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும்.அதே சமயம், தரமான விதைகளை உருவாக்குவது என்பது, ஒரு முறையோடு முடிந்து விடும் பணி அல்ல.ஆண்டுதோறும், ஒவ்வொரு பயிர் பருவத்திலும், விதைகளை உருவாக்க வேண்டும்.மூல மரபணு விதையில் இருந்து, தரமான விதைகளை உருவாக்க, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்ட வேண்டுமென்றால், தற்போது நடைமுறையில் உள்ள, விதை மாற்று விகிதத்தை (எஸ்.ஆர்.ஆர்.,) உயர்த்த வேண்டும்.
கலப்பின பயிர்கள்:தன் மகரந்தசேர்க்கை சார்ந்த பயிர்களுக்கான விதை மாற்று விகிதத்தை, 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். அயல் மகரந்த சேர்க்கை மற்றும் கலப்பின பயிர்களுக்கு, முறையே, 50 மற்றும் 100 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.நாட்டின் பல பகுதிகள் அவ்வப்போது, இயற்கை இடர்பாடுகளை சந்திக்கின்றன. ரபி மற்றும் கரீப் பருவ வேளாண் திட்டம் முடங்கும் பட்சத்தில், உடனடியாக, மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அத்தகைய திட்டத்தில் கூட, தேவையான விதைகள் கிடைக்காத நிலை ஏற்படலாம்.
இதை தவிர்க்க, இயற்கை பாதிப்புகளை சந்திக்கக் கூடிய மாநிலங்கள், அவற்றின் விதை உற்பத்தி அமைப்புகளிடம், முன்கூட்டியே பலதரப்பட்ட விதைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதனால், விதைகளுக்காக இதர மாநிலங்களை சார்ந்திருக்காமல், சொந்தமாக விதை வங்கிகளை உருவாக்கி, அவற்றில் விதைகளை சேமிக்கலாம்.பல மாநிலங்கள், அவற்றின் வேளாண்மை, பயிர் வகைகள், விதைகளுக்கான தேவை இலக்கு, இடர்பாடுகள் ஆகிய வற்றை கருத்தில் கொண்டு, நீண்ட கால (2013–17), அடிப்படையிலான விதை திட்டத்தை உருவாக்கியுள்ளன.
ஒப்பந்தம்:இதனிடையே, விதை உற்பத்தி நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.பல்வேறு பயிர்களுக்கான தரமான விதைகளை, குறித்த காலத்தில் பெறவும், உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கவும், இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|