பதிவு செய்த நாள்
19 அக்2013
14:25

பயணம் என்பது, நமக்கு எப்போது சந்தோஷமான விஷயம் தான். ஆனால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பயணிக்கும் போது, நாம் நம் சந்தோஷத்தை மட்டும் பார்க்காமல், அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியம். குழந்தைகளை காரில் அழைத்துக் செல்லும் போது, நாம் அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறோமா... அவர்கள் எப்போதும் வேடிக்கையிலும், விளையாட்டிலும் ஈடுபட்டிருப்பர். எனவே பெரியவர்கள் தான் அவர்களின் பாதுகாப்பில், அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், காரில் அழைத்துச் செல்லும் போது, குழந்தைகள் கூடுதல் குஷியாக துள்ளி குதித்து, சேட்டைகளில் ஈடுபடுவார்கள். அவர்களை சரியானபடி அழைத்துச் சென்று வருவது பெற்றோரின் முழு பொறுப்பு.
முதலில் குழந்தையை சீட்டில் அமர வைக்கும்போது, பின்புறம் முழுவதுமாக இருக்கையில் அழுந்த சாய்த்து அமரசெய்ய வேண்டும். மடியில் கட்டும் பெல்ட், அவர்களின் இடுப்பு எலும்புகளின் மேலே வருமாறு இருக்க வேண்டும் பெரும்பாலும் அவசரத்தில் வயற்றில் கட்டுபவர்களே அதிகம். குழந்தைகளின் பாக்கெட்டில், ஏதேனும் கூர்மையான பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்து அதை எடுத்து விடுங்கள். ஏனென்றால், அவை பெல்ட் போடும் போதோ அல்லது வண்டியின் அசைவுகளின் போதோ அவர்களை காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது. பெல்ட்டை பொருத்திய பின், சரியானபடி பொருந்தி இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கென அமைந்துள்ள பிரத்யேகமான பூஸ்டர் சீட்டில் பெல்ட்டின் பட்டையானது அவர்களின் தோள்பட்டையில் இருக்க வேண்டும். அது கழுத்தில் இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சீட் பெல்ட்டை அவர்களின் கைக்கு அடியிலோ, பின் பிறத்திலோ கட்டுவது மிகவும் ஆபத்தானது. எப்போதும் பின்புற சீட் தான் குழந்தைகளுக்கு ஆபத்தானது.
ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கென, இருக்கும் இன்பாண்ட் சீட் என்பது எப்போதும், 45 டிகிரி சாய்வாக இருக்க வேண்டும். முடிந்தால் சாதாரண குஷன்களை பயன்படுத்தாமல், ஸ்பெஷல் குஷன்களை பயன்படுத்துங்கள். இல்லையெனில் சீட் பெல்ட் இறுக்கமாக பொருந்தாமல் போகலாம். முக்கியமாக, உங்கள் குழந்தைகள் பாதுகாப்பான பயணத்தை பற்றி புரிய வையுங்கள். ஜன்னல் வழியாக அவர்கள் கை, தலை வெளியே நீட்டாமல் இருக்கும்படி அறிவுறுத்துங்கள். அவ்வப்போது அதை கவனித்தபடியே இருப்பது நல்லது. பயணம் சந்தோஷம் தான். எப்போதும் பத்திரமாக எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாமல், பத்திரமாக திரும்பி வந்தால் தான், அந்த பயணத்தை நாம் நல்ல அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்வோம் இல்லையா.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|