பதிவு செய்த நாள்
19 அக்2013
14:30

கார் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள், எதிர்காலத்தில் கார்கள் சாலைகளில், மற்றவாகனங்களுடனும், சுற்றியுள்ள பொருட்களை தொடர்பு கொள்ளும் விதமாக, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதாவது சாலைகளில், எதிர் செல்லும் கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே, பின்புறம் சிவப்பு விளக்கு எரிகிறது என்று வைத்து கொள்வோம். நாம் அதை கவனிக்கவில்லை என்றாலும், நம் கார் கவனித்துவிட்டு, நம்மை தூண்டுதல் செய்தோ அல்லது தானாகவே பிரேக் பிடிக்க செய்யும் ஆற்றலை பெறும். அதாவது, முன் செல்லும் கார் நம் காரின் உள்புகுந்து தரும் சிக்னல் மூலமாக, இப்பணி நடைபெறுகிறது. இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பத்தின் பெயர் வி.டூ.வி., வெயிக்கல் டூ வெயிக்கல் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதே இதன் பணி. இந்த தொழில் நுட்பத்தை, சில ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள், தங்கள் காரில் உபயோகப்படுத்தி சோதனையில் வெற்றியை கண்டுள்ளனர்.
உதாரணமாக போர்டு நிறுவனம். வி.டூ.வி., தொழில் நுட்பம் செயல்படும் விதம் வி.டூ.வி., தொழில் நுட்பம் மூலம் கம்பி வடம் இல்லா சிக்னல்கள் உபயோகப்படுத்தப்பட்டு, காரின் முன் பின்னும் தகவல் அனுப்பப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காரின் இடம், வேகம் மற்றும் திசை போன்றவை தகவல்களாக அறியமுடியும். இந்த தகவல்கள் மூலம் கார்கள், தங்களுக்குள் கட்டளைகளை பிறப்பித்து, அதற்கேற்ப சரியான இடைவெளியில் பயணிக்கும். 2010ல் வி.டூ.வி., தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வாகனங்கள் கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சியில், 79 சதவீதம் வாகன இடிபாடுகள் மற்றும் விபத்துகள் குறைந்துள்ளது என்பது அறியப்பட்டுள்ளது.
வாகனங்களில் உள் கட்டமைப்பு தொடர்பை மேம்படுத்துதல் வி.டூ.வி., என்பதுடன் முடிந்து விடாமல், மேலும் புதிய முயற்சியாக வெயிக்கல் டூ இன்ஸ்டக்சர் கம்யூனிகேசன் என்ற வி21 தொழில்நுட்பமும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சாலை விதிமுறை வரைப்படங்கள் மற்றும் சாலையில் உள்ள சிக்னல்கள் குறித்த தகவல்கள் காருக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கேற்ப பயணிப்பது. அத்துடன் சாலையில் உள்ள நெருக்கடி தொடர்பான தகவல்கள் பெறப்பட்டும். அதன் வாயிலான மாற்று பாதைக்கான வழிமுறை வழங்கும் வகையிலும் இத்தொழில்நுட்பம் செயல்படும். இந்த இரண்டு தொழில்நுட்பமும் கொண்ட கார்கள் சாலையில் செல்லும் போது வாகன இடிபாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|