பதிவு செய்த நாள்
19 அக்2013
14:38

.* ஹோண்டா மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் இந்தியா, அதிகபட்சமாக, 35 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 3 லட்ச யூனிட்டுகளை, செப்டம்பர் மாதம் மட்டும் விற்று, சாதனை படைத்துள்ளது. 1,63,229 மோட்டார் சைக்கிள்களும், 1,65,736 ஸ்கூட்டர்களும் செப்டம்பர் மாதம் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* யமஹா மோட்டார் இந்தியா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் போன ஆண்டுடன் ஒப்பிடுகையில், 53 சதவீத வளர்ச்சியை, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் பெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும், 60,031 யூனிட்டுகளை விற்று, உள்நாட்டு சந்தையிலும், 13,241 யூனிட்டுகளை வெளிநாட்டு ஏற்றுமதியிலும் விற்றுள்ளது யமஹா.
* மஹிந்திரா டூ வீலர்ஸ், இந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனை, 136 சதவீதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 20,890 யூனிட்டுகள் விற்று போன ஆண்டில், விற்பனையுடன் ஒப்பிடுகையில், 136 சதவீதம் வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. புதிய மஹிந்திரா சென்சுரோ அதிகபட்ச வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
* மஹிந்திரா நிறுவனம் ட்ராக்டர் விற்பனையில், 25,922 யூனிட்டுகள் விற்று உள்ளூர் சந்தையில் செப்டம்பர், 2013இல், 37 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 715 யூனிட்டுகள் இம்மாதத்தில், ஏற்றுமதி செய்யப்பட்டு ட்ராக்டர் விற்பனை மொத்தத்தில், 33 சதவீதமாக (26,637 யூனிட்டுகள்) உயர்ந்துள்ளது.
* ஜாக்குவார் லேண்ட் ஓவர் க்ஓதன் செப்டம்பர் 2013ல் விற்பனை சாதனையை கொண்டாடி வருகிறது. ஆம். ஜாக்குவார் கடந்தாண்டு செப்டம்பர் விற்பனையை விட, இந்தாண்டு செப்டம்பர் மாதம் 13 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும், 10,769 லேண்ட் ஓவர் வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனை என்பது கடந்த வருடம் 11 சதவீதம் என்றிருந்து, இந்த வருடம் செப்டம்பர் முகத்தில் 13 சதவீதம் என்றவாறு உயர்ந்துள்ளது. ஜாக்குவார் மாடல்களில், 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
* மெர்சிஸ் பென்ஸ் தன் வளர்ச்சி வேகத்திற்கே அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் ஜூலை-செப்டம்பர் 2013ன் வளர்ச்சி என்பது, 58 சதவீதம் ஆகும். பெர்சிடிஸ் பென்ஸ் செப்டம்பர் மறு விற்பனை சாதனை 1,011 யூனிட்டுகள் (கடந்த ஆண்டு 654 யூனிட்கள்) பெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு( ஜனவரி-செப்டம்பர்) ஒன்பது மாதத்தில், 31 சதவீதம் விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது. ஆம், ஜனவரி - செப்டம்பர் - 2012ல் பெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை - 6461 யூனிட்டுகள்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|