பதிவு செய்த நாள்
19 அக்2013
14:51

கடந்த அக்டோபர் 9, 2013 மஹேந்திரா அண்டு மஹேந்திரா நிறுவனம் தன் ஸ்கார்பியோ காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக, ஸ்கார்பியோ கார்கள் 4 லட்சம் வாகனங்களுக்குமேல் விற்பனையில் சாதனை படைத்து, இந்திய சாலைகளை ஆட்சிபுரிந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50 ஆயிரம் கார்கள் விற்றிருக்கின்றன. ஸ்கார்பியோவின் மிடுக்கான தோற்றம் ஏற்கனவே அனைவருக்கும் பிரத்தம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஸ்பெஷல் எடிஷனின் அதன் மென்மையான உள்கட்டமைப்பு அதற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷனில் 2.2 லிட்டர், 120 பிஎச்பி யுடனான, 4 சிலிண்டர் * டீசல் என்ஜின், 5.7 நொடிகளில் உங்களை 0 விலிருந்து, 60 கி.மீ., வேகத்தில் பறக்க செய்யும்.
இதில் உள்ள ஏ.பி.எஸ்., எனப்படும் ஆண்டி லாக் ப்பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்ஸ், வழுக்கு பகுதிகளில் பயணிக்கும்போது வண்டியை முழுகட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் சிறப்பு அம்சங்கள். மேலும், இஎஸ்டீ-எஸ்ட்ராஸ்டேபிலிடி டெக்னாலஜியின் சஸ்பென்ஷன் உங்களுக்கு மிகவும் உறுதியான மற்றும் சொகுசான மிதக்கும் பயண அனுபவத்தை தருவது நிச்சயம். இதன் தனித்துவமான சிறப்பு அம்சங்களின் பட்டியல் இத்துடன் முடியவில்லை, நீங்கிள் ரிவர்ஸ் பார்க்கிங் செய்யும்போது உங்களது சிரமத்தை குறைத்து எளிதாக்கும் சென்சாருடன் கூடிய இண்ட லிபார்க்கிங் பொருத்தப்பட்ட பின்புற பம்பர்கள், காரின் வைப்பரையும், ஹெட்லைட்டையும் தானாகவே கட்டுப்படுத்தும் இன்டலிஜண்ட் ரெயின் மற்றும் லைட் சென்சார், மேலும் டயர்களின் காற்றழுத்தம் மற்றும் வெப்பநிலையையும் கணக்கிட்டு காட்டும் டயர்-ட்ரானிக் என்று நீள்கிறது. புதிய ஸ்கார்பியோ ஸ்பெஷல் எடிஷன் தற்போது, 500 கார்கள் மட்டுமே சந்தையில் வெ ளியிடப்பட்டுள்ளது. வியத்தககு வசதிகள் மற்றும் மிடுக்கான தோற்றம் கொண்ட இந்த கார், ஸ்பெஷல் பேர்ல் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. இதன் தற்போதைய சந்தை விலை ரூபாய் 11.88 லட்சம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|