பதிவு செய்த நாள்
24 அக்2013
00:59

புதுடில்லி:முதலீட்டாளர்களிடம் திரட்டும் டெபாசிட்டிற்கு, நிறுவனங்கள் காப்பீட்டு வசதி வழங்க வேண்டும்; தவறினால் ஆண்டுக்கு, 18 சதவீதம் வரையிலான வட்டி விகித அடிப்படையில், அபராதம் வசூலிக்கப்படும் என, நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக வட்டி தருவதாக, ஆசை காட்டி, முறைகேடாக டெபாசிட் திரட்டும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப் பிடி போடும் வகையில், புதிய விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.‘நிறுவனங்கள் திரட்டும் டெபாசிட்டுகளுக்கான கட்டுப்பாடுகள்’ என்ற அந்த வரைவு அறிக்கையின் சாராம்சம்:முதலீட்டாளர்களின் டெபாசிட்டிற்கு, காப்பீட்டு வசதியை நிறுவனங்கள் வழங்க வேண்டும். காப்பீட்டிற்கான பிரிமியத்தை நிறுவனங்களே செலுத்த வேண்டும்.
முதலீட்டாளர்களின் டெபாசிட்டிற்கு காப்பீட்டு வசதி அளிக்கத் தவறினால், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 15 சதவீத வட்டி வீதம், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.முதலீடுகளுக்கு மிக அதிக வருவாய் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை நிறுவனங்கள் வழங்கக் கூடாது.டெபாசிட்டுகளை திரட்டும் முகவர்களுக்கு, தற்போது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளதை விட, மிக அதிக தொகை வழங்கக் கூடாது.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் அதன் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறைகளை மீறுவோருக்கு, நாள்தோறும், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப் படும்.டெபாசிட்டுகளை திரட்டும் அனைத்து நிறுவனங்களும், ஒரு வங்கியில், திரும்பச் செலுத்தும் டெபாசிட்டிற்கான இருப்பு கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அதில், நிறுவனம் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறைந்தபட்சம், 15 சதவீத தொகையை டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுககப்படும்.இவ்வாறு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|