பதிவு செய்த நாள்
24 அக்2013
10:59

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று எழுச்சியுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்து 20,848.54 புள்ளிகளாகவும், நிப்டி 34.05 புள்ளிகள் உயர்ந்து 6,212.40-ஆகவும் இருந்தது. பின்னர் 10 மணியளவில் சென்செக்ஸில் எழுச்சி காணப்பட்டது. இதனால் மூன்று ஆண்டுக்கு பிறகு சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. 10.10 மணியளவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸஅ 262.02 புள்ளிகள் உயுர்ந்து 21,029.90-ஆகவும், தேசியபங்கசந்தையின் நிப்டி 67.40 புள்ளிகள் உயர்ந்து 6,245.90-ஆகவும் இருந்தது.
முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கியதால் இந்த ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்க தொடங்கினர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|