பதிவு செய்த நாள்
24 அக்2013
20:29

"அசோக் லேலண்ட்' சென்ற வாரம், தங்களின் இடைநிலை வணிக வாகனமான, "பாஸ்' வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ட்ரக்கின் வலிமை மற்றும் உறுதியும், ஒரு காரின் வசதியும் ஒருங்கிணைந்தது இது. ஐ.சி.வி. பிரிவில், அதிக வலிமை மற்றும் அதிக செயல்திறன், வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இவ்வேளையில், "பாஸ்' வர்த்தக ரீதியான வெற்றியை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று, சேர்ப்பிக்கும் கடினமான வேலையை, வசதியாகவும், சொகுசாகவும் செய்து முடிக்கும் வகையில், "பாஸ்' பல அம்சங்களை கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு, ஐரோப்பிய டிசைன் கேப் கொண்டும், உள்நாட்டு டிரைவ் லைன் மூலமும் செய்யப்பட்டுள்ளது. இதில் எல்.இ., மற்றும் எல். எக்ஸ் என்ற, இரண்டு வகைகள் உண்டு.
இன்ஜின் செயல்திறன்: இதன் இன்ஜின், எல்.இ., வகையில், 120, எச்.பி., சக்தி கொடுப்பதாகவும், எச் - சீரிஸ், பி.எஸ்3, இன்லைன் ப்யூவல் இன்ஜெக்ஷன் பம்ப் கொண்டு இயங்குகிறது.
இத்துறையிலே, முதலாவதான மற்றுமொரு, "தானியங்கி மேனுவல் டிரான்ஸ்மிஷினை' கொண்டுள்ளது. இது கிளட்ச் செயல்பாடு மற்றும் கியர் மாற்றுதலுக்கான தேவையை நீக்குகிறது. இந்த ஏ.எம்.டி. எரிபொருள் சிக்கனம் வழங்குவதுடன் ஓட்டுனர் சிரமத்தை வெகுவாக குறைகிறது. இதன் இன்ஜின், 130 எச். பி. சக்தி வழங்கும் காமன் ரெயில் இன்ஜின் ஆகும்.பாஸின் உட்புற வசதி: நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஷ்போர்ட், சாமர்த்தியமாய் இயங்கும் கன்ட்ரோல்கள் மல்டி ஆங்கிளில் சரி செய்துக் கொள்ளக்கூடிய இருக்கைகள், சஸ்பென்டட் ஆகியவை, சொகுசான பயணத்தை வழங்குகிறது. டில்ட்டபிள் மற்றும் டெலஸ்கோப்பிக் மூவ்மென்ட் கொண்ட ஸ்டியரிங், 2 பாயின்ட் சஸ்பென்டட் கேபின், ஹைட்ராலிக் கேப்டில்ட் மெக்கானிசம் போன்றவை, மோசமான சாலையானாலும், அதிர்வின்றி செல்லவும், வண்டியை குறைந்த முயற்சியில் திருப்பவும் உதவுகிறது.
வாடிக்கையாளர் பெருமை கொள்ளும் சேவைகள்: விற்பனைக்கு பின்னான சேவையில், அசோக் லேலண்டு, பல முன்னணி அம்சங்களை வழங்கி, தங்கள் வாடிக்கையாளர்களை அசத்துகிறது. கேபினுக்கு, 3 ஆண்டு வாரன்டி, பின்பக்க எல்.இ.டி. விளக்குகளுக்கு, 5 ஆண்டு மாற்றத்தக்க கியாரன்டி போன்ற சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது பாஸ். தரத்தை உறுதிபடுத்துவதற்காக டிரக் ஆன் டிரக் போக்குவரத்து முறை மூலம், "ஜீரோ' கி.மீ., ரீடிங்குடன் வாகனம் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படுகிறது. தொந்தரவில்லாத வாகன நிதியுதவி, விரிவான இன்சூரன்ஸ், கவர் வழங்குவதற்கான முன்னணி நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன், "அசோக் லேலண்ட்' கூட்டு வைத்துள்ளது.
அசோக் லேலண்ட் பாஸ், 9.6 டன், 11.9 டன் மற்றும் 12.9 டன் ஜி.வி.டபிள்யு. உடன், ஹாலேஜ் பிரிவில் துவங்கப்படுகிறது. 40 ஆயிரம் கி.மீ.,க்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால், போதும் என்பதும், ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங் சிஸ்டம் கொண்டுள்ளதும், 15.3 மீ., டர்னிங் ரேடியஸ் கொண்டதுமான அசோக் லேலண்ட், "பாஸ்' வாடிக்கையாளர் மத்தியில், நிச்சயமாக பாஸாகி விடும் என்றே நம்பலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|