பதிவு செய்த நாள்
25 அக்2013
00:50
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்து, 23,760 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், தொடர்ந்து உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று, சற்று குறைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,979 ரூபாய்க்கும், 1 சவரன், 23,832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 31,860 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, ஒன்பது ரூபாய் குறைந்து, 2,970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 72 ரூபாய் சரிவடைந்து, 23,760 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 100 ரூபாய் குறைந்து, 31,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 53.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 50,130 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|