பதிவு செய்த நாள்
26 அக்2013
05:12
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 424 ரூபாய் குறைந்து, 23,336 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,970 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 31,760 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, ஒரே நாளில் அதிரடியாக, தங்கம் விலை கிராமுக்கு, 53 ரூபாய் குறைந்து, 2,917 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 424 ரூபாய் சரிவடைந்து, 23,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
10 கிராம் சுத்த தங்கம், 870 ரூபாய் குறைந்து, 30,890 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் ெவள்ளி, 53.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் ெவள்ளி, 49,760 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சில தினங்களாக சந்தையில், தங்கம் கிடைக்காமல் இருந்ததால், கூடுதல் விலை கொடுத்து, வாங்க வேண்டியிருந்தது. தற்போது, உள்ளூர் சந்தையில், தேவையான அளவிற்கு, தங்கம் கிடைப்பதால், இதன் விலை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|