தெலுங்­கானா போராட்­டம் எதிரொலி சேலத்தில் பட்டு சேலைகள் தேக்கம்தெலுங்­கானா போராட்­டம் எதிரொலி சேலத்தில் பட்டு சேலைகள் தேக்கம் ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
தீவன விலை உயர்வு, பயன்­பாடு குறைந்ததுகோழிப்பண்ணை தொழில் கடும் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
05:28

உயர்ந்து வரும் தீவனச் செலவும், குறைந்து வரும் கோழி­க­ளுக்­கான தேவையும், கோழிப்பண்ணை தொழிலை கடு­மை­யாக பாதித்­துள்­ளது.
கோழித் தீவ­னத்தில் இடம் பெறும் முக்­கிய பொரு­ளான மக்காச் சோளத்தின் விலை, கடந்த சில மாதங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது. இத்­துடன்,இதர மூலப் பொருட்­க­ளான, சோயா, கம்பு, இறக்கு­மதி செய்­யப்­பட்ட அமினோ அமிலங்கள், வைட்­ட­மின்கள் போன்­ற­ வற்றின் விலையும், 25 – 30 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.
உற்பத்தி செலவு:இதனால், கோழி­க­ளுக்­கான உற்­பத்தி செல­வினம், கிலோ­வுக்கு, 8 – 10 ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது. ஒரு கிலோ கோழி உற்பத்­திக்­கான அடக்க விலை, 63 – 65 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.தென் மாநி­லங்­களில் இருந்து, வட மாநி­லங்­களைச் சேர்ந்த, கோழிப் பண்ணை­யா­ளர்கள் அதிக அளவில் தீவனங்­களை வாங்­கு­கின்­றனர்.
இதனால், தென் மாநில கோழிப் பண்ணை­யா­ளர்­களை விட, வட மாநில பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு, கோழிக்­கான உற்­பத்தி செலவு அதி­க­ரித்­துள்­ளது.இந்­நி­லையில், நாடு முழு­வதும், கோழி­க­ளுக்­கான தேவை குறைந்­துஉள்­ளது. இதனால், கோழி­களின் பண்ணை விலையும், சரி­வ­டைந்து வரு­கி­றது.
ஒரு­புறம், கோழியின் உற்­பத்திச் செலவினம் உயர்ந்து வர, மறு­புறம் அதற்கான தேவை குறைவால், விலை சரிவ­டைந்­துள்­ளது. இதனால், கோழிபண்­ணை­யா­ளர்கள், இரு வகை­யான நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ளனர்.
சென்னை:சென்ற ஜூன் மாதம், சென்னை, பெங்க­ளூரு, ஐத­ராபாத் உள்­ளிட்ட, தென்­னிந்­திய நக­ரங்­களில், ஒரு கிலோ கோழியின் பண்ணை விலை, 80 – 83 ரூபாய் என்ற அளவில் இருந்­தது. இது, தற்­போது, 34 சத­வீதம் சரி­வ­டைந்து, 55 ரூபா­யாக குறைந்­துள்­ளது.
அது போன்று, இதே காலத்தில், டில்லி, லக்னோ, சண்­டிகர் போன்ற வட இந்திய நகரங்­களில், கோழியின் பண்ணை விலை, 93 ரூபாயில் இருந்து, 62 ரூபா­யாக சரிவடைந்­துள்­ளது.இதனால்,கோழி உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு, கிலோ­வுக்கு, 8 – 10 ரூபாய் வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.
இறக்குமதி:இது குறித்து, கர்­நா­டக கோழிப் பண்ணை­ யா­ளர்கள் சங்­கத்தின் (கே.பி.எப்.பீ.ஏ.,) தலைவர் எம்.சி.ஆர். ஷெட்டி கூறி­ய­தா­வது:கோழி உற்­பத்­தி­யா­ளர்கள், தீவ­னங்­களில் சேர்ப்­ப­தற்­காக, அமினோ அமி­லங்கள் மற்றும் வைட்­ட­மின்­களை இறக்­கு­மதி செய்­கின்­றனர்.

இப்­பொ­ருட்­களின் விலை, அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்­சியால், 50 சத­வீதம் வரை அதி­க­ரித்­து உள்­ளது.கடந்த ஆண்டு, இதே காலத்தில், இப்­பொ­ருட்­களின் விலை, 150 – 170 (கிலோ) ரூபா­யாக இருந்­தது. இது, தற்­போது, 250 – 270 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இது தவிர, கர்­நா­ட­காவில் கடந்த ஆண்டு ஏற்­பட்ட வறட்சி கார­ண­மாக, மக்காச் சோளம் உற்­பத்தி குறைந்து, அதன் விலையும் உயர்ந்­துள்­ளது. இது போன்ற கார­ணங்­களால், கோழித் தீவ­னங்­க­ளுக்­கான செல­வினம் அதி­க­ரித்­துள்­ளது.
வளர்ச்சி:அதே சமயம், சிர­வணம் முதல் கார்த்­திகை (ஜூலை–­நவ.,) வரை, மக்கள் அசைவ உண­வு­களை தவிர்ப்­பதால், கோழி­க­ளுக்­கான தேவை குறைந்­துள்­ளது. இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
கடந்த, 2012ம் ஆண்டு, கோழிப் பண்ணை துறை, 17.2 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 34 லட்சம் டன்­னாக உயர்ந்­தி­ருந்­தது. இது, முந்தைய, 2011ம் ஆண்டு, 29 லட்சம் டன்­னாக இருந்­தது.
கடந்த, 2000ம் ஆண்டு, உள்­நாட்டில், கோழி உற்­பத்தி, 10 லட்சம் டன்­னாக இருந்தது. இந்­திய கோழிப் பண்ணை துறை, ஆண்­டுக்கு, 8 – 10 சத­வீதம் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. கறிக்­கோழி துறையின் வளர்ச்சி, 10 சத­வீ­த­மாக உள்­ளது.இக்ரா நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்வறிக்­கையில், கடந்த, 10 ஆண்­டு­களில், தனி நபரின் ஓராண்­டுக்­கான கோழி நுகர்வு, 0.8 கிலோவில் இருந்து, 2.8 கிலோ­வாக உயர்ந்துள்­ளது என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)