அன்­னிய செலா­வணி கையி­ருப்பு 28,112 கோடி டால­ராக அதி­க­ரிப்புஅன்­னிய செலா­வணி கையி­ருப்பு 28,112 கோடி டால­ராக அதி­க­ரிப்பு ... வனிலா சாகு­ப­டியில் விவ­சா­யிகள் சுறு­சு­றுப்பு:9 மாதங்­களில் 300 சத­வீதம் விலை உயர்வு வனிலா சாகு­ப­டியில் விவ­சா­யிகள் சுறு­சு­றுப்பு:9 மாதங்­களில் 300 சத­வீதம் ... ...
தோல் பொருட்கள் ஏற்­று­மதி ரூ.10 ஆயிரம் கோடியை தாண்­டி­யது:நிதி­யாண்டின் முதல் நான்கு மாத காலத்தில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
01:12

புது­டில்லி:நாட்டின் தோல் பொருட்கள் ஏற்­று­மதி, நடப்பு நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரை­யி­லான நான்கு மாத காலத்தில், ரூபாய் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில் சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்­டுள்­ள­தாக, மத்­திய வர்த்­தக ஆய்வு மற்றும் புள்­ளி ­யியல் இயக்­கு­ன­ரகம் வெளியிட்­டுள்ள புள்­ளி ­வி­வ­ரத்தில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.ரூபாய் மதிப்பு:கணக்­கீட்டு காலத்தில், ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி, 10,536 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில் மேற்­கொள்­ளப்­ பட்ட ஏற்­று­ம­தியை (8,928 கோடி ரூபாய்) விட, 18.35 சத­வீதம் அதி­க­மாகும்.இதே காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில் இவற்றின் ஏற்­று­மதி, 13.28 சத­வீதம் அதி­க­ரித்து, 163.50 கோடி டால­ரி­லி­ருந்து, 185 கோடி டாலராக வளர்ச்சி கண்­டுள்­ளது.
நாட்டின் ஒட்டு மொத்த ஏற்று­ம­தியை விட, இறக்­கு­மதி அதிக­ரித்­ததால், கடந்த 2012–13ம் நிதி­யாண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 4.8 சத­வீதம் அல்­லது 8,800 கோடி டால­ராக அதி­க­ரித்­தது.
நடவடிக்கை:இதை, நடப்பு நிதி­யாண்டில், 3.8 சத­வீதம் அல்­லது 7,000 கோடி டால­ராக குறைக்கும் வகையில், மத்­திய அரசு, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது.இந்­நி­லையில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்­று­மதி சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்டு வரு­வது, மகிழ்ச்சி அளிப்ப­தாக உள்­ளது.
காலணிகள்:மதிப்­பீட்டு காலத்தில், பயன்­பாட்­டிற்­கான தோல் ஏற்­று­மதி, 13.98 சத­வீதம் அதி­க­ரித்து, 2,100 கோடி ரூபா­யி­லி­ருந்து, 2,393 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது. தோல் கால­ணிகள் ஏற்­று­மதி, 15.21 சத­வீதம் அதி­கரித்து, 3,048 கோடி­யி­லி­ருந்து, 3,511 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்டுள்­ளது.காலா­ணி­க­ளுக்­கான உதிரி பாகங்கள் ஏற்­று­மதி, 35.90 சத­வீதம் உயர்ந்து, 460 கோடி­யி­லி­ருந்து, 625 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
தோல் ஆடைகள் ஏற்­று­மதி, 7.33 சத­வீதம் உயர்ந்து, 944 கோடி­யி­லி­ருந்து, 1,013 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.வளர்ச்சி:தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 21.03 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,979 கோடி­யி­லி­ருந்து, 2,396 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. விலங்­கி­னங்­க­ளுக்கு பயன்­படுத்­தப்­படும் தோல் பொருட்கள் ஏற்று­மதி, 39.07 சத­வீதம் அதிக­ரித்து, 186 கோடி­யி­லி­ருந்து, 258 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்டுள்­ளது.தோல் சாராத கால­ணிகள் ஏற்­று­மதி, 82.24 சத­வீதம் அதிக­ரித்து, அதா­வது, 186 கோடி­யி­லி­ருந்து, 339 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மேற்­கண்ட அனைத்து பொருட்­களும், ரூபாய் மதிப்பில் மட்­டு­மின்றி, டாலர் மதிப்பின் அடிப்­ப­டை­யிலும் சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளன.குறிப்­பாக, தோல் சாராத கால­ணிகள் ஏற்­று­மதி, டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில், 74.43 சத­வீதம் அதி­க­ரித்து, 3.40 கோடி டால­ரி­லி­ருந்து, 6 கோடி டால­ராக அதிக­ரித்­துள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. நம்­நாட்டின் தோல் பொருட்கள், 28க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.நாட்டின் மொத்த தோல் பொருட்கள் ஏற்­று­ம­தியில், ஜெர்­மனி, 12.26 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது. இதை­ய­டுத்து, இங்­கி­லாந்து, 11.22 சத­வீத பங்­க­ளிப்­பு­டனும், அமெ­ரிக்கா, 10.57 சத­வீத பங்­களிப்­பு­டனும், முறையே, இரண்­டா­வது மற்றும் மூன்­றா­வது இடங்­களில் உள்­ளன.
டென்மார்க்:இவை தவிர, இத்­தாலி (7.63 சத­வீதம்), பிரான்ஸ் (5.90), ஸ்பெயின் (4.33), நெதர்­லாந்து (3.51), சீனா (0.81), டென்மார்க் (1.48), யு.ஏ.இ., (3.30), பெல்­ஜியம் (1.75) மற்றும் ஹாங்காங் (0.65 சத­வீதம்) ஆகிய நாடு­களுக்கும் மிக அதி­க­ளவில் தோல் பொருட்கள் ஏற்­று­ம­தி­யா­கின்­றன.நாட்டின் மொத்த தோல் பொருட்கள் ஏற்­று­ம­தியில் மேற்­கண்ட, 12 நாடு­களின் பங்­க­ளிப்பு மட்டும், 63 சத­வீத அள­வி­ற்கு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)