வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 அக்2013
01:22

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள், வசூலாகாத கடன்களை வசூலிப்பதில், மெத்தனமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.மத்திய நிதி அமைச்சகம்நடப்பு நிதியாண்டின், ஏப்.,–ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொதுத்துறை வங்கிகள், 1,416 கோடி ரூபாய் என்ற அளவிற்கே, வசூலாகாத கடன்களை வசூலித்துள்ளன.
அதே சமயம், இதே காலத்தில், இவ்வங்கிகளின் வசூலாகாத கடன், இத்தொகையை விட, இரு மடங்கு அதிகரித்துள்ளது.பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத கடன்கள் உயர்ந்து வருவது குறித்து, அண்மையில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கவலை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள், அவற்றின் வசூலாகாத கடன் பிரிவில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளை தேர்வு செய்து, கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சகம், வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வசூலாகாத கடன் பிரிவின் கீழ், 474 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், இவ்வங்கியின் வசூலாகாத கடன் பிரிவில், 1,196 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள், அவற்றின் வசூலாகாத கடன் பிரிவில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளை தேர்வு செய்து, கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சகம், வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வசூலாகாத கடன் பிரிவின் கீழ், 474 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், இவ்வங்கியின் வசூலாகாத கடன் பிரிவில், 1,196 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
பெரிய நிறுவனங்கள்:அதாவது, குறிப்பிட்ட காலாண்டில், இவ்வங்கியின் வசூலாகாத கடன் குறையவில்லை. மாறாக, 722 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
வசூலித்த கடன் தொகையில், பெரும்பகுதி, சிறிய அளவில் கடன் பெற்றவர்களிடம் இருந்தே வசூலிக்கப்பட்டுள்ளது.பெரிய நிறுவனங்கள் பெற்ற பெரும்பாலான கடன்கள், மறுசீரமைக்கப்பட்டிருக்கும். அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தையில் வங்கியும், கடன் வாங்கிய நிறுவனமும், ஈடுபட்டிருக்கும் என, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சென்ற ஜூன் இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் அளித்த மொத்த கடனில், வசூலாகாத கடன், 3.99 சதவீதம் அல்லது, 1.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளின் கீழ், வசூலாகாமல் உள்ள தொகை, 63,671 கோடி ரூபாயாக உள்ளது. இது, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், 34.83 சதவீதமாகும். வங்கிகளின் வசூலாகாத கடனில், பெரும்பாலான தொகை, 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் அதிகமாக வழங்கப்பட்ட கடனாகும்.கண்காணிப்பு:வங்கிகள், வசூலாகாத கடன்களை வசூலிப்பதில் மெத்தனமாக உள்ள நிலையில், அவற்றின் நடவடிக்கையை முடக்கும் முயற்சியையும் கடனாளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இத்தகையோரை தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொதுத்துறை வங்கி களுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு அக்டோபர் 28,2013
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் அக்டோபர் 28,2013
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா அக்டோபர் 28,2013
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு அக்டோபர் 28,2013
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!