பதிவு செய்த நாள்
28 அக்2013
01:23

சென்னை:வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 51.47 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 35.61 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் நிகர லாபம், 44.54 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 31.95 சதவீதம் வளர்ச்சி கண்டு, 188.84 கோடியிலிருந்து, 249.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், 844 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, 567 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவை, கடந்த நிதிஆண்டின் இதே காலத்தில் முறையே, 760 கோடி மற்றும் 496 கோடி ரூபாயாக இருந்தன.செப்., 30ம் தேதி வரையிலுமாக, நிறுவனத்திற்கு வர வேண்டிய கடன் நிலுவைத் தொகை, 30.27 சதவீதம் உயர்ந்து, 3,098 கோடியிலிருந்து, 4,036 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வசூலாகாத கடன், 2.12 சதவீதத்தில் இருந்து, 1.67 சதவீதமாக குறைந்துள்ளது.
நடப்பாண்டு செப்., 30ம் தேதி வரையிலுமாக,நிறுவனத்தின் மூலதன இருப்பு விகிதம், 25.55 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, குறைந்தபட்ச அளவான, 12 சதவீதத்தை காட்டிலும் அதிகம் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலுமாக, இந்நிறுவனம், பல்வேறு மாநிலங்களில், 82 கிளைகள் மற்றும் 20 விரிவாக்க கிளைகளை கொண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|