‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.50 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.50 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கோதுமைக்கான ஏற்றுமதி விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
23:51

புதுடில்லி: மத்திய உணவு அமைச்சகம், ஒரு டன் கோதுமைக்கான ஏற்றுமதி விலையை, 260 டாலராக குறைப்பது குறித்து, பரிசீலனை செய்து வருகிறது.இது குறித்து, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியதாவது:
நடப்பாண்டில், 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யும் வகையில், முக்கிய அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், ஒரு டன் கோதுமைக்கான ஏற்றுமதி விலை, 300 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச சந்தையில் இதன் விலை தற்போது குறைந்துள்ளது. கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கான, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பல சர்வதேச ஏற்றுமதியாளர்கள், ஒரு டன் கோதுமைக்கான ஏற்றுமதி விலையை, 260 – 267 டாலர் என்ற அளவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்டிருந்த விலை, மத்திய அரசு நிர்ணயித்திருந்த விலையை விட குறைவாக இருந்ததால், ஒப்பந்தபுள்ளி ரத்து செய்யப்பட்டது.ஆனால், அரசின் கைவசம், கோதுமை கையிருப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இச்சூழ்நிலையில், நடப்பாண்டில், கோதுமை அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் செய்து இருப்பு வைக்க இடவசதி இல்லை.
இதனால், உணவு அமைச்சகம் கோதுமையின் ஏற்றுமதி விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து முடிவு எடுக்க, உணவு அமைச்சகம், மத்திய அமைச்சரவை குழுவின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளது.
முதலில், பொதுத் துறையைச் சேர்ந்த, எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி., மற்றும் பி.இ.சி., ஆகிய நிறுவனங்கள் வாயிலாக, இந்திய உணவு கழகத்தின் கையிருப்பில் இருந்து, 20 லட்சம் டன் கோதுமையை, ஒரு டன், 300 டாலர் என்ற விலையில் விற்க அனுமதி அளித்திருந்தது.
நடப்பாண்டில், இது வரையில் கோதுமை ஏற்றுமதி மேற்கொள்ளப்படவில்லை. கடந்த, அக்., 1ம் தேதி நிலவரப்படி, இந்திய உணவு கழகத்திடம், 3.60 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது. இது, கையிருப்பு வைக்க வேண்டிய, 2.12 கோடி டன் அளவை விட அதிகமாகும்.கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், 42 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ததன் வாயிலாக, மத்திய அரசுக்கு, 140 கோடி டாலர் வருவாய் கிடைத்தது. அப்போது, ஏற்றுமதிக்கான, 1 டன் கோதுமையின் விலை, சராசரியாக, 311.38 டாலராக இருந்தது.இவ்வாறு, தாமஸ் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)