தங்கம் விலை 224 ரூபாய்  குறைந்ததுதங்கம் விலை 224 ரூபாய் குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆறறிவு இயந்திர குதிரை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2013
14:59

உயர்ந்த ரக, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட குதிரை தன் எஜமானனின், உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ளும். காடு, மேடு, பள்ளம், தண்ணீர், சக்தி, மணல் என்று, எங்கு வேண்டுமானாலும் அனாவசியமாய் ஓடிக் கடக்கும், சாகசத்தை தன் எஜமானனுடன் சேர்ந்து ரசிக்கும் விசுவாசமாய், பாதூப்பாய் தன் முதுகில் ஏற்றிச் செல்லும் என்றெல்லாம், பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இதெல்லாம், அந்த காலத்து ராஜகுமாரனுக்கு தானே என்கிறீர்களா? இந்த காலத்து ராஜகுமாரனுக்காக இயந்திர குதிரையாய் வந்துள்ளதுதான், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் என்றால் மிகையல்ல. இதன் தோற்றம், செயல் திறன், சாகச அம்சங்கள் எல்லாமே பயணங்கள் மேற்கொள்ள கட்டுப்பாடுகளே, எங்கும், எதிலும் இல்லை என்பதை பறை சாற்றுகின்றன.

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லான்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவரின் மேம்படுத்தப்பட்ட, புதிய அவதாரம் தான் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட். இதன் எடை தற்போதுள்ள ரேஞ்ச் ரோவரை விட, அரை உள் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. அலுமினியத்தினால் ஆன, இதன் மோனோகாக் பாடி மற்றும் ஏரோடைனமிக் டிசைன் லேசாய் இருப்பதால், சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது என்பதுடன், கையாளும்போது மிகவும் லாவகமாக இயக்க உதவுகிறது.

தோற்றம்: அழுத்தமான, நேர்த்தியான வடிவமைப்பும், சற்றே பின்புறம் சாய்ந்தது போன்ற மேற்கூரையும், பார்த்ததும் கவரும்படி உள்ளது. அதன் செயல்திறனுக்கேற்ற உறுதியான கட்டமைப்பை, அதன் வெளித்தோற்றத்தில் பார்க்க முடிகிறது. அகலமான வீல் பேஸ் இருந்தாலும், அதன் முகப்பு விளக்கு அதன் தோற்றத்தை அடக்கமாக காட்டுவதாக உள்ளது. இதன் அளவும், வடிவமைப்பும், சக்தி வாய்ந்ததாகவும், உறுதியானதாகவும் தெரிகிறது.

உட்புறம்: ஓட்டுனர் சாலையை முழுவதுமாய் பார்த்து நம்பிக்கையுடன், வாகனத்தை கட்டுப்படுத்தக் கூடிய (ஸ்போர்ட்ஸ் கமாண்ட் டிரைவிங் பொசிஷன்) வசதி இதில் உள்ளது. காக்பிட் முழுவதுமே மிகவும் எளிமையாகவும், கையாள வசதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்புறம் உள்ள பேனோராமிக் ரூப் வெளிச்சந்தையும், இயற்கை அழகை ரசிக்கவும் உதவுகிறது. தாராள இடவசதியுடன், 7 பேர் அமரக்கூடிய வகையில் உள்ளது இந்த எஸ்யுவி.

செயல் திறன்: வனரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் நினைத்த மாத்திரத்தில், நம் விரல் நுனிக்கு கட்டுப்படுகிறது. இதன் பொறியியல் தொழில்நுட்பம் நிறைய வியக்க வைப்பதாய் உள்ளது. வாகனத்தை இயக்குவது மிகவும் சுலபமாகவும், ரசிக்கக்கூடியதாகவும், ஸ்திரமாகவும் இருக்கிறது. கியர் மாறுவது மிகத் துரிதமாகவும், பெடல் கியர் மிகச் சுலபமாக இயக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இதில் உள்ள சீக்வென்ஷியல் கியர் கன்ட்ரோல் அதிகபட்ச கியர் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இதில் நான்கு மூலைகளிலும் ஏர் சஸ்பென்ஷன் உள்ளதால், ஒவ்வொரு சக்கரத்தின் உயர்த்தையும் தனித்தனியாக இயக்க முடிகிறது. அதனால் அதிக மேடு பள்ளம் உள்ள மலைப்பாதையானாலும், வண்டி சாதாரண சாலையில் போவது போல் சீராக செல்கிறது.
மேலும், இதில் ட்வின் சேனல் ஆக்டிவ்ரோல் கன்ட்ரோல் உள்ளதால், காரின் முன்புறத்தையோ, பின்புறத்தையோ தனித்தனியாக, உயர்த்திக் கொள்ள முடிகிறது. இதனால் மிகவும் சரிவான மலைப்பாதைகளில், ஏறவும் இறங்கவும் கஷ்டப்படவே தேவையில்லை.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டில் உள்ள, "டெரெபிள் ரெஸ்பான்ஸ் 2' மிகவும் சாதுர்யமான சிஸ்டம் ஆகும். இது சாலையின் தன்மையை கணித்து, அதற்கேற்ப காரின் எல்லா செட்டிங்குகளையும் மாற்றிக் கொள்கிறது. அதுவும் நொடிக்கு, 500 முறை என்ற வேகத்தில், இதனால் மண்ணோ, கல்லோ, தண்ணீரோ, ஐஸ்கட்டியோ எந்த கவலையும் இன்றி, காரை ஓட்டிச் செல்லலாம்.
மிகவும் செங்குத்தான மலைப் பாதையா, மயிர்கூச்செரியும் கூர்மையான வளைவுகளா, வளைவுகளில் சடாரென்று, பிரேக் போட வேண்டியுள்ளதா, 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, சடாரென்று ஒரு சில அடிக்குள் நிறுத்த வேண்டுமா, இம்மாதிரி எவ்வாறான சவாலுக்கும் ஈடு கொடுக்கிறது. இதன் சஸ்பென்ஷவ் சிஸ்டமும் மற்றும் இதிலுள்ள எலக்ட்ரானிக் சிஸ்டமும் சேர்ந்து இயங்கும் புதுமையான தொழில்நுட்பம்.

சொசுகு அம்சங்கள்: ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டில் உள்ள மெரிடியன் 3டி ஆடியோ தொழில்நுட்பம் ஸ்டுடியோ தரத்தில் உள்ள மியூசிக் சிஸ்டம் 23 ஸ்பீக்கர்களுடன் அட்டகாசமாக உள்ளது. சொகுசான வடிவமைப்பில் உள்ள சீட்கள், சரவுன்ட் கேமரா சிஸ்டம் 360 டிகிரி கோணத்தில் வண்டியை சுற்றிலும் பார்க்க முடிவது போன்றவை, இதன் சொகுசு அம்சங்களாகும்.

வேரியண்ட்கள்:
1)ஆட்டோ பயோக்ராபி பெட்ரோல் - ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் -4999 சிசி திறன் 8 சிலிண்டர் 32 வால்வ் - 503 பிஎச்பி சக்தி 6000-6500 ஆர்பிஎம்மில்.
2) எஸ் (டீசல்) - ஆட்டோ டிரான்ஸ்மிஷன் - 2993 சிசி திறன் - 6 சிலிண்டர் 24 வால்வ் - 288 பிஎச்பி சக்தி 4000 ஆர்பிஎம்மில்.
3) எஸ்இ (டீசல்) -ஆட்டோ டிரான்ஸ்மிஷன் - 2993 சிசி திறன் - 6 சிலிண்டர் 24 வால்வ் - 288 பிஎச்பி சக்தி 4000 ஆர்பிஎம்மில்.
4) எச்எஸ்இ (டீசல்) - ஆட்டோ டிரான்ஸ்மிஷன் - 2993 சிசி திறன் - 6 சிலிண்டர் 24 வால்வ் - 288 பிஎச்பி சக்தி 4000 ஆர்பிஎம்மில்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)