தங்கம் விலை 224 ரூபாய்  குறைந்ததுதங்கம் விலை 224 ரூபாய் குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனத் துறையில் ஷெவர்லேயின் செம்மையான பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2013
15:11

உலகின் மிகப்பெரிய வாகன நிறுவனங்களில் ஒன்றான ஷெவர்லே, 2003ம் ஆண்டு, இந்தியாவில் காலடி பதித்தது. எரிபொருள் சிக்கனம், உறுதியான கட்டமைப்பு கொண்ட செயல்திறன் மிக்க, அழகிய வடிவமைப்பிலான வாகனங்களை அளித்து, இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது இந்நிறுவனம். எல்லாத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள, "ஷெவர்லே' வாகனங்களைப் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் கீழ்வருமாறு:

ஷெவர்லே பீட் டீசல் அழகிய ஹேட்பேக், இதில் இன்டெலி ட்ரைவ் தொழில்நுட்பம் கொண்ட சக்தி வாய்ந்த இன்ஜின், 25.44 கி.மீ., லிட்டருக்கு என்ற மைலேஜ் கொடுப்பதாக உள்ளது. ஷெவர்லே பீட் பெட்ரோல் ஸ்மார்ட்டெக் ஐஐ இன்ஜின் கொண்டு, லிட்டருக்கு, 18.6 கி.மீ., மைலேஜ் கொடுப்பதாக, நகரச் சாலைகளுக்கு ஏற்றதாகவே உள்ளது. அழகான, அடக்கமான ஷெவர்லே ஸ்பார்க் பல வியப்பளிக்கும் அம்சங்களையும், துரிதமாய் செயல்படும் இன்ஜின் திறனும் கொண்டுள்ளதாகும். தாராள இடவசதி கொண்ட ஷெவர்லே செயில் ஹேட்ச் பேக் அழகான தோற்றமும், சொகுசான வசதிகளையும், பொருட்கள் வைக்க தாராள இடவசதியுடன் இருக்கும். சொகுசான பெரிய ஷெவர்லே செயில் செடான் மாடல், தனித்துவமான அழகில், நிறைய சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகும். ஷெவர்லே என்ஜாய் பெரிய அளவுள்ள குடும்பக் கார் ஆகும். கேப்டன் சீட்கள், பின்புற "ஏசி' போன்ற சிறப்பு அம்சங்களுடன் உள்ளது; என்ஜாய். இந்தியாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷெவர்லே என்ஜாய் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெவர்லே க்ரூஸ் ஈடு இணையற்ற பல அம்சங்களைக் கொண்டுள்ள கார் ஆகும். மிகவும் உறுதியான கட்டமைப்பு, முரட்டுத் தனமும் வலிமையும் பிரதிபலிக்கும் தோற்றம், 166 பி.எஸ். சக்தி கொண்ட இன்ஜின், கையாள சுலபமாகவும், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகவும் உள்ளது க்ரூஸ். இதன் மானுவல் மற்றும் ஆட்டோ ட்ரான்பிஷன் இரண்டுமே, சக்தி நிரம்பி செயல்திறன் வழங்குவதாகும். நம்பிக்கைக்குரிய வாகனமான ஷெவர்லே தவேரா, கரடுமுரடான சாலைகளிலும், மென்மையான பயணத்தை வழங்குவதாகும். தாராள இடவசதி, சொகுசான உட்புறம், எரிபொருள் திறன் கொண்ட இன்ஜின் போன்றவை, அதிகமான பயணம் மேற்கொள்பவர்களுக்கான சரியான தேர்வாகும். ஷெவர்லே இந்தியா நிறுவனம், இந்த ஆண்டு விழாக்கால கொண்டாட்டத்திற்காக, பல சலுகைகளை வழங்குகிறது. "ஷெவர்லே அக்டோபர் பொனான்ஜா' மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எல்லா ஷெவர்லே கார்களுக்கும், சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

விலையிலும், மற்ற அம்சங்களிலும் என்று, மொத்த ஆதாயமாக ஷெவர்லே பீட் டீசலுக்கு, 60 ஆயிரம் ரூபாயும், ஸ்பார்கிற்கு, 58 ஆயிரம் ரூபாயும், ஷெவர்லே செயில் ஹேட்ச் பேக்கிற்கு, 38 ஆயிரம் ரூபாயும், செயில் செடானிற்கு, 40 ஆயிரம் ரூபாயும், ஷெவர்லே என்ஜாயிற்கு, 33 ஆயிரம் ரூபாயும், ஷெவர்லே க்ரூஸிற்கு 85, ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
1911ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் துவங்கப்பட்டு, பல சிறப்பு உற்பத்தி செய்து, 140 நாடுகளில் ஆண்டிற்கு, 45 லட்சம் கார் மற்றும் ட்ரக்குகளை விற்பனை செய்து வருவது, ஷெவர்லே நிறுவனம் என்பது குறிப்பிடதக்கதாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)