பதிவு செய்த நாள்
01 நவ2013
00:26
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 224 ரூபாய் குறைந்து, 23,040 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில் உயர்ந்த, தங்கத்தின் விலை சில தினங்களாக குறைந்து வருகிறது.
சென்னையில், கடந்த செவ்வாய் கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,908 ரூபாய்க்கும், 1 சவரன், 23,264 ரூபாய்க்கும் விற்பனையானது.24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம், ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால், அதே விலைக்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 28 ரூபாய் குறைந்து, 2,880 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 224 ரூபாய் சரிவடைந்து, 23,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 295 ரூபாய் குறைந்து, 30,495 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 52.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 49,385 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|