பதிவு செய்த நாள்
01 நவ2013
00:56

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், நேற்றும் மிகவும் சிறப்பாக இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.62 சதவீதம் மற்றும் 0.76 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.
அதேசமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், மருந்து துறை தவிர்த்து, அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள், வங்கி, உலோகம், ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 130.55 புள்ளிகள் அதிகரித்து, 21,164.52 புள்ளிகளில் நிலைபெற்று புதிய உச்சத்தை எட்டியது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,205.44 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,991.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எஸ்.பீ.ஐ., டாட்டா ஸ்டீல், கெயில் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டாக்டர் ரெட்டீஸ், சன்பார்மா, சிப்லா, மகிந்திரா உள்ளிட்ட 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 47.45 புள்ளிகள் உயர்ந்து, 6,299.15 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,309.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,235.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|